UEFA நேஷன்ஸ் லீக்' (UEFA Nations League) போட்டிகளுக்கான இங்கிலாந்து கால்பந்து அணியிலிருந்து டினோ லிவ்ராமென்டோ Tino Livramento , கொபி மைனூ Kobbie Mainoo, கோல் பால்மர் Cole Palmer, மார்கஸ் ரஷ்போர்ட் Marcus Rashford மற்றும் டெக்லான் ரைஸ் Declan Rice ஆகிய ஐந்து முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர். செய்தி விளையாட்டு

UEFA Nations League : இங்கிலாந்து அணியிலிருந்து 5 முக்கிய வீரர்கள் விலகல்

  • September 21, 2026
  • 0 Comments

UEFA நேஷன்ஸ் லீக்’ (UEFA Nations League) போட்டிகளுக்கான இங்கிலாந்து கால்பந்து அணியிலிருந்து டினோ லிவ்ராமென்டோ Tino Livramento , கொபி மைனூ Kobbie Mainoo, கோல் பால்மர் Cole Palmer, மார்கஸ் ரஷ்போர்ட் Marcus Rashford மற்றும் டெக்லான் ரைஸ் Declan Rice ஆகிய ஐந்து முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர். இதனையடுத்து Nottingham Forest அணியின் மத்தியகள வீரர் மோர்கன் கிப்ஸ்-ஒயிட் (Morgan Gibbs-White) மற்றும் எவர்டன் அணியின் ஜேம்ஸ் கார்னர் (James Garner) ஆகியோரை […]

ஐரோப்பா

சுற்றுலாக் கட்டணத்தை உயரத்துவது தொடர்பில் வெனிஸ் பரிசீலனை

  • September 21, 2026
  • 0 Comments

வெனிஸ் அரசாங்கம் சுற்றுலா நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய தினசரி கட்டணத்தை €30 (S$44) வரை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதைய €5 முதல் €10 வரையிலான கட்டணம், அளவுக்கு மீறிய சுற்றுலாப் பயணிகளைத் தடுப்பதற்கு மிகவும் குறைவாக உள்ளது என்று வரவு செலவு மற்றும் வரிவிதிப்பு கவுன்சிலர் மிஷேல் ஸுயின் Michele Zuin சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் நுழைவுக் கட்டணத்தை 50 […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நாளை (22) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். இலங்கை செய்தி

நாளை நாடாளுமன்றம் வருகிறது ‘அனோஜன் விவகாரம்’

  • September 21, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் நாளை (22) சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். சவூதி அரேபியாவில் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ள அனோஜனின் விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதேவேளை, அனோஜன் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும் நாளை, சபையில் கேள்வி எழுப்புவார் […]

ஐரோப்பா

இங்கிலாந்து திருச்சபை பேராயர் ஸ்டீபன் கான்வே பணியிடைநீக்கம்

  • September 21, 2026
  • 0 Comments

லிங்கன் ஆயர் ஸ்டீபன் கான்வே Stephen Conway மதப்பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து திருச்சபை இன்று இதனை அறிவித்துள்ளது. 2018 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மேலவையான ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்’ (House of Lords) உறுப்பினரான கான்வே, 2023-ல் லிங்கன் ஆயராகப் பொறுப்பேற்றார். பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்ட […]

ஐரோப்பா

ரஷ்ய தேர்தல் சர்வதேச சட்டத்தின் மீறல் – பிரான்ஸ் கடும் அதிருப்தி

  • September 21, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் ஆளும் கட்சியான யுனைடெட் ரஷ்யா’ (United Russia) சுதந்திரமான தேர்தலுக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று  பிரான்ஸ் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் இன்று (21.09) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனியப் பகுதிகளில் தேர்தலை நடத்தியது சர்வதேச சட்டத்தின் மற்றொரு மீறலாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “சிவில் சமூகம் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறை, பல அரசியல் கட்சிகள் விலக்கி வைக்கப்படுதல், கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் […]

உலகம்

ICC நீதிமன்றத்தின் மீது தடைகளை விதிக்கும் ட்ரம்ப் நிர்வாகம்

  • September 21, 2026
  • 0 Comments

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மீதான ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் முடக்கும் வகையிலான தடைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் தயார் செய்துள்ளதுடன், அவற்றை விரைவில் அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்கும் இந்த உலகளாவிய நீதிமன்றத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது. இந்த நீதிமன்றத்தின் மீது தனக்குள்ள அதிருப்தியை ட்ரம்ப் நிர்வாகம் வெளிப்படையாகவே காட்டி வருவதுடன், அதன் செயல்பாடுகளை முடக்கவும் முயற்சித்து வருகிறது. இஸ்ரேலியத் தலைவர்களுக்கு […]

போலி கோவிட்-19 (COVID-19) தடுப்பூசி சான்றிதழைப் பெற்றதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து தேசிய கால்பந்து அணியின் தலைவரான கிரானிட் ஷாக்கா (Granit Xhaka) சர்வதேச பயிற்சி முகாமில் பங்கேற்பதிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் கால்பந்து சங்கம் (SFV) அறிவித்துள்ளது. செய்தி விளையாட்டு

போலி கொவிட் – 19 தடுப்பூசி: சர்ச்சையில் சிக்கிய சுவிஸ் அணி தலைவர்

  • September 21, 2026
  • 0 Comments

போலி கோவிட்-19 (COVID-19) தடுப்பூசி சான்றிதழைப் பெற்றதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து தேசிய கால்பந்து அணியின் தலைவரான கிரானிட் ஷாக்கா (Granit Xhaka) சர்வதேச பயிற்சி முகாமில் பங்கேற்பதிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் கால்பந்து சங்கம் (SFV) அறிவித்துள்ளது. தனது தவறை ஒப்புக்கொண்டு ஷாக்கா பகிரங்க அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவரும் சுவிஸ் கால்பந்து சங்கத் தலைமையும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. இது குறித்துச் சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ஷாக்கா, “அச்சமயத்தில் நிலவிய மன உளைச்சல் […]

உலகம்

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் – 28 பேர் உயிரிழப்பு

  • September 21, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இரண்டு மாகாணங்களை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஏறக்குறைய 03 மாதங்கள் அமைதியான சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தலிபான்களால் நடத்தப்படும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “இந்த ஆக்கிரமிப்புக்கு […]

இலங்கை செய்தி

அனோஜனின் விடுதலை குறித்து அவரின் பொற்றோருக்கு அநுர வழங்கிய உறுதிமொழி

  • September 21, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர். சிவராசா அனோஜனின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த அவரின் பெற்றோர், உடனடியாகத் தலையிட்டு தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை கவனமுடன் செவிமடித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் இயன்ற முயற்சிகளை […]

உலகம்

அமெரிக்காவிற்கான உத்தியோகப்பூர்வ பயணத்திற்கு தயாராகும் சீன ஜனாதிபதி

  • September 21, 2026
  • 0 Comments

சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குத் தயாராகி வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வரும் 23 ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார். வரும் 25 ஆம் திகதிவரை அங்கு தங்கியிருக்கும் அவர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.