ஐரோப்பா

இங்கிலாந்து திருச்சபை பேராயர் ஸ்டீபன் கான்வே பணியிடைநீக்கம்

லிங்கன் ஆயர் ஸ்டீபன் கான்வே Stephen Conway மதப்பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து திருச்சபை இன்று இதனை அறிவித்துள்ளது.

2018 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மேலவையான ‘ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்’ (House of Lords) உறுப்பினரான கான்வே, 2023-ல் லிங்கன் ஆயராகப் பொறுப்பேற்றார்.

பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்ட ஜான் ஸ்மித் (John Smyth) விவகாரத்தை இங்கிலாந்து திருச்சபை கையாண்ட விதம் குறித்து நடத்தப்பட்ட சுயாதீன ஆய்வில் ஸ்டீபன் கான்வே Stephen Conway மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஸ்மித் விவகாரம் தொடர்பான ஆய்வின் விளைவாகப் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து திருச்சபை தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூழலில் இவரது பதவி விலகல் நிகழ்ந்துள்ளது.

இந்த விவகாரம் 2024-ல் அப்போதைய கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி (Justin Welby) பதவி விலகுவதற்கும் வழிவகுத்தது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்