உலகம்

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் – 28 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் இரண்டு மாகாணங்களை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஏறக்குறைய 03 மாதங்கள் அமைதியான சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தலிபான்களால் நடத்தப்படும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “இந்த ஆக்கிரமிப்புக்கு ஆப்கானிஸ்தான் தரப்பு தகுந்த பதிலடி கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்