ஐரோப்பா

ரஷ்ய தேர்தல் சர்வதேச சட்டத்தின் மீறல் – பிரான்ஸ் கடும் அதிருப்தி

ரஷ்யாவின் ஆளும் கட்சியான யுனைடெட் ரஷ்யா’ (United Russia) சுதந்திரமான தேர்தலுக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்று  பிரான்ஸ் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் இன்று (21.09) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனியப் பகுதிகளில் தேர்தலை நடத்தியது சர்வதேச சட்டத்தின் மற்றொரு மீறலாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“சிவில் சமூகம் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறை, பல அரசியல் கட்சிகள் விலக்கி வைக்கப்படுதல், கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு மற்றும் சுதந்திர ஊடகங்களுக்குத் தடை விதித்தல் ஆகியவை, ரஷ்ய மக்கள் தங்கள் விருப்பத்தைத் சுதந்திரமாக உருவாக்கிக்கொள்ளும் மற்றும் வெளிப்படுத்தும் திறனைப் பலவீனப்படுத்தியுள்ளன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்