UEFA Nations League : இங்கிலாந்து அணியிலிருந்து 5 முக்கிய வீரர்கள் விலகல்
UEFA நேஷன்ஸ் லீக்’ (UEFA Nations League) போட்டிகளுக்கான இங்கிலாந்து கால்பந்து அணியிலிருந்து டினோ லிவ்ராமென்டோ Tino Livramento , கொபி மைனூ Kobbie Mainoo, கோல் பால்மர் Cole Palmer, மார்கஸ் ரஷ்போர்ட் Marcus Rashford மற்றும் டெக்லான் ரைஸ் Declan Rice ஆகிய ஐந்து முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர்.
இதனையடுத்து Nottingham Forest அணியின் மத்தியகள வீரர் மோர்கன் கிப்ஸ்-ஒயிட் (Morgan Gibbs-White) மற்றும் எவர்டன் அணியின் ஜேம்ஸ் கார்னர் (James Garner) ஆகியோரை மேலாளர் தோமஸ் டுசெல் (Thomas Tuchel) இங்கிலாந்து அணியில் சேர்த்துள்ளார்.
இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை அணியுடன் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை கருத்து வெளியிட்ட மேலாளர் தோமஸ் டுசெல், 6 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள 26 வயதான கிப்ஸ்-ஒயிட், தொடக்க அணியிலேயே சேர்க்கப்படும் நிலைக்கு நெருக்கமாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இங்கிலாந்தின் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படாமல் சர்ச்சையை ஏற்படுத்திய 24 வயதான கோல் பால்மர், இம்முறை தோமஸ் டுஸெலால் மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிறிய காயம் காரணமாக அவர் அணியிலிருந்து விலகியுள்ளார். பால்மர் தனது திறமையை நிரூபித்து அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக டுசெல் முன்னதாகக் கூறியிருந்தார்.
கடந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்காத பால்மர், நடப்புச் பருவத்தில் செல்சியா அணிக்காக விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்கி, 4 கோல்களையும் 2 கோல் உதவிகளையும் (Assists) செய்துள்ளார்.
இங்கிலாந்து அணி வரவிருக்கும் சர்வதேசப் போட்டிகளின் இடைவேளையில் சனிக்கிழமை (செப்டம்பர் 26) வெம்ப்லி மைதானத்தில் உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 29 அன்று செக் குடியரசுடனும், அக்டோபர் 3 அன்று குரோஷியாவுடனும் அவர்களின் சொந்த மண்ணில் மோதவுள்ளதுடன், அக்டோபர் 6 அன்று செக் குடியரசை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்து விளையாடவுள்ளது.




