ஐரோப்பா

சுற்றுலாக் கட்டணத்தை உயரத்துவது தொடர்பில் வெனிஸ் பரிசீலனை

வெனிஸ் அரசாங்கம் சுற்றுலா நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய தினசரி கட்டணத்தை €30 (S$44) வரை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய €5 முதல் €10 வரையிலான கட்டணம், அளவுக்கு மீறிய சுற்றுலாப் பயணிகளைத் தடுப்பதற்கு மிகவும் குறைவாக உள்ளது என்று வரவு செலவு மற்றும் வரிவிதிப்பு கவுன்சிலர் மிஷேல் ஸுயின் Michele Zuin சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் நுழைவுக் கட்டணத்தை 50 யூரோவாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும்  இருப்பினும் அதிகாரிகள் அதிகபட்சமாக 30 யூரோக்கள் என்ற கட்டணத்தை நிர்ணயிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

உலக நாடுகளிலேயே முதல் முறையாக வெனிஸில்தான் சுற்றுலா நுழைவுக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்