உலகம்

ICC நீதிமன்றத்தின் மீது தடைகளை விதிக்கும் ட்ரம்ப் நிர்வாகம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மீதான ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் முடக்கும் வகையிலான தடைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் தயார் செய்துள்ளதுடன், அவற்றை விரைவில் அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்கும் இந்த உலகளாவிய நீதிமன்றத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நீதிமன்றத்தின் மீது தனக்குள்ள அதிருப்தியை ட்ரம்ப் நிர்வாகம் வெளிப்படையாகவே காட்டி வருவதுடன், அதன் செயல்பாடுகளை முடக்கவும் முயற்சித்து வருகிறது.

இஸ்ரேலியத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடிவாரண்டுகளையும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட முந்தைய விசாரணையையும் ICC நீதிமன்றம் கைவிட வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ஜூலை மாதத்தில் இந்த நீதிமன்றத்தைத் தனிமைப்படுத்தும் ஒரு பிரச்சாரத்தையும் அறிவித்திருந்தார்.

மேலும் பிற நாடுகளை இந்த நீதிமன்றத்திலிருந்து விலகுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வொஷிங்டன் ஏற்கனவே பல ICC நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது தடைகளை விதித்துள்ளது. இருப்பினும், நீதிமன்றத்தின் மீதே நேரடியாகத் தடைகளை விதிப்பது இதுவே முதல் முறையாகும்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை இந்த வாரத்திலேயே இறுதி செய்யப்படலாம் என்று அதிகாரிகள் கூறியதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்