உலகம்

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடக சட்டங்களை பின்பற்றாத நிறுவனங்களுக்கு இரட்டிப்பு அபராதம்

  • June 29, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதற்கான சட்டவிதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு அபராதங்களை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்ச அபராதம் இப்போது 99 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களாக  அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்புடைய அறிவிப்பை  பிரதமர் அந்தோனி அல்பானீஸின் (Anthony Albanese) அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், முறையான மீறல்களுக்கான அபராதம் 49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களிலிருந்து 99 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களாக உயர்ந்துள்ளது. “உலகிலேயே […]

வாஷிங்டனில் கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தத்தை லெபனானைச் சேர்ந்த சன்னி அமைப்புகள் Sunni groups வன்மையாகக் கண்டித்துள்ளன. உலகம் செய்தி

வாஷிங்டன் ஒப்பந்தத்தை ஏற்கமுடியாது; லெபனான் Sunni குழுக்கள் திட்டவட்டம்

  • June 29, 2026
  • 0 Comments

வாஷிங்டனில் கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தத்தை லெபனானைச் சேர்ந்த சன்னி அமைப்புகள் Sunni groups வன்மையாகக் கண்டித்துள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களை களைவதோடு இஸ்ரேலியப் படைகளின் வெளியேற்றத்தை இணைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனை என்று இந்த குழுக்கள் வாதிடுகின்றன. இந்த ஒப்பந்தம் லெபனான் ராணுவத்தின் செயல்பாடுகளில் இஸ்ரேல் தலையிட வழிவகுப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். லெபனானுக்குள் இந்த விவகாரம் பெரும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் இதனை அமைதிக்கான வாய்ப்பாகப் பார்த்தாலும், மற்றவர்கள் இதனை அமெரிக்கா மற்றும் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

அடுத்த மாதமும் வெப்ப அலை தொடரும் : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

  • June 29, 2026
  • 0 Comments

வரலாறு காணாத வெப்ப அலையின் தாக்கத்தை இத்தாலியும் பால்கன் பகுதிகளும் இன்று உணர்ந்ததாக அறிவித்துள்ளன. இந்த வெப்ப அலை நூற்றுக்கணக்கான கூடுதல் மரணங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், ஒரு வாரத்திற்கும் மேலாக கண்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை  சீர்குலைத்துள்ளது. இந்த வெப்ப அலையினால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. அதேநேரம் இந்த பகுதிகளில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இத்தாலியில், வடக்கில் உள்ள போல்சானோ முதல் தெற்கில் உள்ள […]

ஹம்பர்க் (Hamburg) நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஸ்டேட் (Stade) நகரம், சுமார் 50,000 மக்கள் தொகையைக் கொண்ட ஒரு பகுதியாகும். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஐவர் சுட்டுக்கொலை: வடக்கு ஜெர்மனியில் பயங்கரம்

  • June 29, 2026
  • 0 Comments

வடக்கு ஜெர்மனியின் ஸ்டேட் (Stade) நகரில் உள்ள இளைஞர் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். திங்கட்கிழமை நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும், இந்தத் தாக்குதலுக்கான பின்னணிக் காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. “இளைஞர் நல மையக் கட்டிடம் ஒன்றில் பலரைக் குறிவைத்து இந்தக்கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இதில் […]

1966ஆம் ஆண்டு பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், யாழ். தீவகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராவார். இலங்கை செய்தி

யாழ். மறைமாவட்டத்துக்கு புதிய ஆயர் நியமனம்

  • June 29, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், திருத்தந்தை லியோவால் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஓய்வுபெற்றமையைத் தொடர்ந்தே, இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 1966ஆம் ஆண்டு பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், யாழ். தீவகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராவார். இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், முதுகலைமாணி, கலைமாணி பட்டங்களையும் பெற்றுள்ளார். அத்துடன், உரோமில் […]

வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை செய்தி

மேயர் பதவி நீக்கம் – வவுனியாவில் போராட்டம்

  • June 29, 2026
  • 0 Comments

வவுனியா மாநகர சபை மேயர் பதவியிலிருந்து சு.காண்டீபன் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வடக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும் வவுனியாவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வவுனியா – பண்டாரவன்னியன் […]

ஜூலை 4 முதல் 9 வரை நடைபெறவுள்ள இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு , ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். இந்தியா செய்தி

ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் இந்திய குழு அறிவிப்பு

  • June 29, 2026
  • 0 Comments

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கரிட்டா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களுடன் வெளிவிவகார அமைச்சரின் மேலும் சில அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். ஜூலை 4 முதல் 9 வரை நடைபெறவுள்ள இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு , ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். எனினும், மேற்படி திகதிகளில் பிரதமர் […]

சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi விடுத்த அழைப்பின்பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறுகின்றது. உலகம் செய்தி

பரபரப்புக்கு மத்தியில் சீனா பறக்கிறார் சவுதி வெளிவிவகார அமைச்சர்

  • June 29, 2026
  • 0 Comments

சவுதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் இளவரசர் Faisal bin Farhan Al Saud, இந்த வாரம் சீனாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi விடுத்த அழைப்பின்பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறுகின்றது. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் அவரது பயணம் இடம்பெறும் என ராஜதந்திர வட்டாங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சுவிட்சர்லாந்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனைத் தொடர்ந்து […]

உலகம்

இஸ்ரேல் மீதான சைபர் தாக்குதல்களை அதிகரித்த ஈரான்

  • June 29, 2026
  • 0 Comments

இந்த ஆண்டிலெ் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி இன்று அறிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சைபர் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலின் தேசிய சைபர் இயக்குநரகத்தின் இயக்குனர் ஜெனரல் Yossi Karadi இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் போது, ​​இஸ்ரேலின் அதிகாரிகள் 2025 ஆம் ஆண்டு ஜுன் மாதம்  1,600 சைபர் தாக்குதல் சம்பவங்களை பதிவு […]

உலகம்

பதற்றத்தை தணித்து அமைதி வழிக்கு திரும்ப அமெரிக்கா – ஈரான் இணக்கம்

  • June 29, 2026
  • 0 Comments

கடந்த சில நாட்களாக நடந்த தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் தற்போது பின்வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி  தொடர் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தன. இந்நிலையில் தற்போது தாக்குதல்களை இடைநிறுத்தி அமைதி வழியை கடைப்பிடிக்க இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கப்பல்கள் இனி அந்த நீர்வழிப்பாதையில் “சுதந்திரமாக” செல்ல முடியும் என்று பெயர் வெளியிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஜலசந்தியில் தாக்குதல்களை […]