ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சமரச முயற்சி: நோர்வே, பின்லாந்து தலைவர்கள் புடினுடன் பேச்சு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் மற்றும் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே ஆகியோர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த உரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் மற்றும் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே ஆகியோர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த உரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கியதிலிருந்து, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பெரும்பாலும் புடினுடன் நேரடித் தொடர்புகளைத் தவிர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், பின்லாந்து மற்றும் நோர்வே தலைவர்களின் இந்த உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

புடினுடன் உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்ததாக நோர்வே பிரதமர் ஸ்டோரே தெரிவித்துள்ளார்.

“கலந்துரையாடல் வெளிப்படையாகவும் ஆழமான கருத்துப் பரிமாற்றத்துடனும் அமைந்தது. நாம் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள். இந்தப் போரின் முடிவு எமது பாதுகாப்பிலும், ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். போரை முடிவுக்குக் கொண்டுவர நேரடிப் பேச்சுவார்த்தைகள் அவசியம்” என பின்லாந்து ஜனாதிபதி ஸ்டப் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொலைபேசி உரையாடலின் நோக்கம், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் புதினுக்கு நேரடியாகத் தகவல்களைத் தெரிவிப்பதாகும் என இரு நாடுகளின் தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், போர் தீவிரமடைவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும் தாம் வலியுறுத்தியதாக நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி உக்ரைனுடன் கலந்தாலோசித்த பின்னரே முன்னெடுக்கப்பட்டதாகவும் இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் ஒஸ்லோவில் நடைபெற்ற சந்திப்பில், பின்லாந்து மற்றும் நோர்வே தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கொஃப் ஆகியோரைச் சந்தித்திருந்தனர்.

இதனையடுத்து, ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள் பங்கேற்கும் அடுத்தகட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாகவே புடினுடன்தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி