ஐரோப்பா

எலான் மஸ்க் ஒரு மேதை – ஆப்பிரிக்க தலைவர்கள் முன்னிலையில் புகழ்ந்து பேசிய புட்டின்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு மேதை என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

அவரது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய அமைப்புக்கு பதிலடியாக ரஷ்யா தனது திட்டத்தை இப்போதுதான் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்டார்லிங்கின் ஒரு பதிப்பை, ரஷ்யாவுடனான போர் முழுவதும் உக்ரைன் இராணுவம் ஆளில்லா விமானச் செயல்பாடுகள் மற்றும் போர்க்களத் தொடர்புகளின் முக்கிய அங்கமாகப் பயன்படுத்தி வருகின்ற நிலையில் புட்டினின் இந்த அறிவிப்பு முக்கியமான விடயமாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யா தனது சொந்த ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) போன்ற அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக 30-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளதாகவும் டிஜிட்டல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மக்ஸுத் ஷடாயேவ் Maksut Shadayev, அறிவித்திருந்தார்.

இதன்போது அவரை இடைமறித்து பேசிய புட்டின், மேற்படி தெரிவித்துள்ளார்.

“ஒரு நிமிடம், இது நமது முதல் படி என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எலோன் மஸ்க் ஒரு மேதை, அவர் உண்மையிலேயே ஒரு மேதைதான்,” என்று புதின் கூறியுள்ளார்.

புட்டின் இவ்வாறு கூறும்போது ஆப்பிரிக்க தலைவர்கள் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்