கருத்து & பகுப்பாய்வு

இயல்பு வாழ்க்கையை நெருக்கடிக்கு தள்ளிய போர் – திண்டாடும் மக்கள்

அமெரிக்காவுடனான எட்டு மாத காலப் போர், ஈரானில் பல தசாப்தங்களில் காணப்படாத மிக மோசமான பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்களின் வருமானம் குறைந்து, பல குடும்பங்கள் கடும் நெருக்கடி நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளன.

இந்த நெருக்கடியின் தாக்கம் நாட்டின் முக்கிய நகரங்களைத் தாண்டி, பிற பகுதிகளிலும் எதிரொலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் மீது நடத்திய தாக்குதல்கள், அதைத் தொடர்ந்து தெஹ்ரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது மற்றும் வளைகுடாப் பகுதியில் உள்ள ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது போன்ற நிகழ்வுகள், உலகளாவிய பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.

குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதி தடைப்பட்டது ஏற்கனவே பொருளாதார அழுத்தத்தில் இருக்கும் ஈரானுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குடும்பமொன்றின் குறைந்தபட்ச மாதாந்திர வாழ்க்கைச் செலவு சுமார் 336 டொலர்களாக உள்ளது.

இது, சந்தை மாற்று விகிதத்தின்படி கணக்கிடப்படும் சராசரி மாதாந்திர ஊதியமான 92 டாலரை விட மூன்று மடங்குக்கும் அதிகமாகும்.

பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஊதியங்கள் உயரவில்லை என்பதால், பல குடும்பங்கள் தங்கள் சேமிப்பைக் கரைத்துவிட்டதாகவும் ரொய்டர்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை