சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi விடுத்த அழைப்பின்பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறுகின்றது. உலகம் செய்தி

பரபரப்புக்கு மத்தியில் சீனா பறக்கிறார் சவுதி வெளிவிவகார அமைச்சர்

  • June 29, 2026
  • 0 Comments

சவுதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் இளவரசர் Faisal bin Farhan Al Saud, இந்த வாரம் சீனாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi விடுத்த அழைப்பின்பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறுகின்றது. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் அவரது பயணம் இடம்பெறும் என ராஜதந்திர வட்டாங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சுவிட்சர்லாந்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனைத் தொடர்ந்து […]

உலகம்

இஸ்ரேல் மீதான சைபர் தாக்குதல்களை அதிகரித்த ஈரான்

  • June 29, 2026
  • 0 Comments

இந்த ஆண்டிலெ் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி இன்று அறிவித்துள்ளார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சைபர் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலின் தேசிய சைபர் இயக்குநரகத்தின் இயக்குனர் ஜெனரல் Yossi Karadi இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் போது, ​​இஸ்ரேலின் அதிகாரிகள் 2025 ஆம் ஆண்டு ஜுன் மாதம்  1,600 சைபர் தாக்குதல் சம்பவங்களை பதிவு […]

உலகம்

பதற்றத்தை தணித்து அமைதி வழிக்கு திரும்ப அமெரிக்கா – ஈரான் இணக்கம்

  • June 29, 2026
  • 0 Comments

கடந்த சில நாட்களாக நடந்த தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் தற்போது பின்வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி  தொடர் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தன. இந்நிலையில் தற்போது தாக்குதல்களை இடைநிறுத்தி அமைதி வழியை கடைப்பிடிக்க இரு நாடுகளும் உடன்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கப்பல்கள் இனி அந்த நீர்வழிப்பாதையில் “சுதந்திரமாக” செல்ல முடியும் என்று பெயர் வெளியிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஜலசந்தியில் தாக்குதல்களை […]

இந்தியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் கல்வி, பாதுகாப்பு, மீன்வளம், விண்வெளி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 19 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியா கல்வி

இந்தியாவுடன் 19 ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டது சீஷெல்ஸ்

  • June 29, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் கல்வி, பாதுகாப்பு, மீன்வளம், விண்வெளி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 19 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவின் 50-வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். இதையொட்டி, சீஷெல்ஸ் தலைநகர் விக்டோரியாவுக்கு அவர் நேற்று முன்தினம் சென்றார். நேற்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ […]

கத்தாரில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் நிதியில், முதற்கட்டமாக 6 பில்லியன் டாலர் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

முடக்கப்பட்ட டாலர்களை மீட்டது ஈரான்

  • June 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் ஈரானிய மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையின் கீழ், ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறைகள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கத்தாரில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் நிதியில், முதற்கட்டமாக 6 பில்லியன் டாலர் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். மேலும், முடக்கப்பட்டுள்ள எஞ்சிய ஈரானிய நிதிகளையும் மீட்டெடுப்பதற்கான தங்களது முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். […]

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான 35 வயது ஸ்டோக்ஸ், கடந்த 15 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். செய்தி விளையாட்டு

விடைபெறுகிறார் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நட்சத்திரம்

  • June 29, 2026
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தீர்க்கமான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும், இங்கிலாந்து நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் நான் விளையாடும் கடைசி இரண்டு நாட்கள் இதுவே” என்று Ben Stokes கூறியுள்ளார். தற்போது மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதால், திங்கள்கிழமை நடைபெறும் […]

2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 68 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இலங்கையில் தலைதூக்கும் டெங்கு: தடுப்பு நடவடிக்கை தீவிரம்

  • June 29, 2026
  • 0 Comments

இலங்கையில் டெங்கு நோய் ஊழித்தாண்டவமாடிவருகின்றது. இவ்வருடத்தில் ஆறு மாத காலப்பகுதிக்குள் 52 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 31 பேர் பலியாகியுள்ளனர். மே மற்றும் ஜுன் மாதங்களில் பாதிப்பு வீதம் இரட்டிப்பாகியுள்ளது. 2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 68 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜுன் மாதத்தில் மாத்திரம் 27 நாட்களுக்குள் 18 ஆயிரத்து 227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 27 ஆயிரத்து 305 பேரும், தென் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்

  • June 29, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் நேற்றைய தினம் இரு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக  உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ​ டெலிகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் ஒருவர் பலியானார். அத்துடன் ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் இந்த ஆலையின் சேதத்தால், கருங்கடல் துறைமுகங்கள் வழியிலான ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. […]

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 25 எம்எல்ஏக்களில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா செய்தி தமிழ்நாடு

தொடரும் எம்எல்ஏக்களின் வெளியேற்றம்: திணறும் அதிமுக

  • June 29, 2026
  • 0 Comments

அதிமுகவின் கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை கையளித்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் உடனடியாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 25 எம்எல்ஏக்களில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு எம்.ஆர்.விஜயபாஸ்கரை அதிமுகவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமித்தார் […]

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுவருகின்றன என தெரியவருகின்றது. அரசியல் இலங்கை செய்தி

NPP அரசுக்கு அடுத்த ‘பொறி’ – எதிரணிகள் வியூகம்

  • June 29, 2026
  • 0 Comments

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுவருகின்றன என தெரியவருகின்றது. அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் என்பவற்றை மீறிட்டார் என்பதை பிரதான குற்றச்சாட்டாக முன்வைத்து இதற்குரிய ஏற்பாடு இடம்பெறுவதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெற்றிடத்தை நிரப்பும் விடயத்தில் அரசமைப்பு பேரவை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எதிரணி உறுப்பினர்கள் வசம் உள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்குரிய உறுப்பினர் பலம் இல்லாததாலேயே, சபாநாயகருக்கு […]