உலகம்

ருவாண்டா பாதுகாப்பு அமைச்சகம் மீது தடை விதித்தது அமெரிக்கா

ருவாண்டாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது அமெரிக்கா இன்று தடை விதித்துள்ளது.

அமெரிக்க நிதித்துறையின் இணையதளத்தில் இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசு தொடர்பான புதிய தடைகளின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முன்னேறிய AFC/M23 கிளர்ச்சியாளர்கள், காங்கோவின் வடக்கு மற்றும் தெற்கு கிவு மாகாணங்களின் பெரும் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இந்த முன்னேற்றத்தின் போது, ​​கிழக்கு காங்கோவின் மிகப்பெரிய இரண்டு நகரங்களையும் அவர்கள் கைப்பற்றினர்.

ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கத்திய நாடுகளும், இந்தக் குழுவிற்கு ருவாண்டா ஆதரவளிப்பதாகக் கூறுகின்றன.  ஆனால், ருவாண்டா அரசு இதனை மறுத்து வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட தரப்பினர் முன்னெடுத்து வரும் மத்தியஸ்த முயற்சிகள் தொடர்ந்தாலும், அங்கு மோதல்கள் நீடிக்கின்றன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகளால் களச் சூழலில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்