ஈரானின் ஆதரவுடன் தாக்குதல் நடத்த வாய்ப்பு – பிரித்தானியாவை முன்னதாகவே எச்சரித்த இஸ்ரேல்
ஈரானின் ஆதரவுடன் தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பிரித்தானியாவை இஸ்ரேல் முன்னதாகவே எச்சரித்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பிரித்தானியா இஸ்ரேலிய நிறுவனங்கள் மீது தடை விதிப்பதற்கு முன்னதாக இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் அவர் RAF ஃபேர்ஃபோர்ட் (RAF Fairford) தாக்குதல் குறித்தான் தெரிவித்தாரா என்பது வெளிப்படுத்தப்படவில்லை.
சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் ஏன் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் பின்னர் வெளியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூசகமாகக் கூறியதைத் தொடர்ந்து நெதன்யாகுவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.




