இந்தியா செய்தி

வாக்கு திருட்டை மக்கள் பொருத்துக் கொள்ள மாட்டார்கள்: காங்கிரஸ் திட்டவட்டம்

வாக்களிப்பு முறையைக் கைப்பற்றுவதற்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சிறப்பு திருத்த முறை (SIR - Special Intensive Revision) தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தை மிக கடுமையாகச் சாடியுள்ளது.

வாக்களிப்பு முறையைக் கைப்பற்றுவதற்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சிறப்பு திருத்த முறை (SIR – Special Intensive Revision) தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தை மிக கடுமையாகச் சாடியுள்ளது.

இனி எந்தவொரு வடிவத்திலும் மக்கள் “வாக்குத் திருட்டை” (vote chori) பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் அக்கட்சி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் (O.P. Rawat) அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“சுதந்திரத்திற்குப் பிறகு இத்தனை தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் வாக்கு உரிமையை இழப்பது இதுவே முதல்முறை.

‘SIR’ நடைமுறை காரணமாக இதுவரை சுமார் 14 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது” என்று ராவத் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னர் தேர்தல் ஆணையம் ஒரு “தங்கத் தரநிலையாக” (gold standard) விளங்கியதாகவும், ஆனால் தற்போதைய செயல்பாடுகளால் அதன் நம்பகத்தன்மை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது என்றும் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையரின் சட்டவிரோத முடிவுகளைத் தடுக்க ஏனைய இரு தேர்தல் ஆணையர்களும் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்ற ஓ.பி. ராவத்தின் கருத்தையும் அவர் மேற்கோளிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி