இலங்கை செய்தி

இலங்கை காவல்துறைக்கு புதிய ஆடையை அறிமுகப் படுத்துவது குறித்து ஆராய்வு?

இலங்கை காவல்துறைக்கான புதிய சீருடையை அறிமுகப்படுத்துவது குறித்து சீனாவுடன் பேச்சு நடத்தி வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இலங்கை காவல்துறைக்கான புதிய சீருடையை அறிமுகப்படுத்துவது குறித்து சீனாவுடன் பேச்சு நடத்தி வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இலங்கை காவல்துறை புதிய சீருடையை அறிமுகப்படுத்துவது குறித்தும், அதன் ஒரு பகுதியாக உடலில் அணியும் காணொளிப் பதிவு கருவியை சேர்ப்பதற்கான பரிந்துரைகளையும் ஆராய்ந்து வருகிறது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஐந்து வகையான சீருடைகள் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

“முதல் தொகுதி , இரண்டாவது தொகுதி என ஐந்து வகையான சீருடைத் தொகுப்புகள் இருக்கும்.இவை இன்னும் பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளன.

இறுதி முழுமையான சீருடைத் தொகுப்பில் உடலில் அணியும் காணொளிப் பதிவு கருவியை நாங்கள் சேர்க்கிறோம். முதலில் இதை அறிமுகப்படுத்தி முன்னேற்றத்தைக் கவனிப்போம்.

ஒரே நேரத்தில் பெருமளவிலான கருவிகளை வாங்கி, பெரும் முதலீட்டுடன் கூடிய ஒரு பெரிய திட்டத்தை ஆரம்பிப்பது தற்போதைய நிலையில் ஆபத்தானதாக அமையலாம்.

அமைச்சுக்கு சில வரவு-செலவுத் திட்டக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அமைச்சுக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே கொள்முதல் செய்யப்படும் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

எங்களிடம் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடுகள் உள்ளன. முறையான செயல்படுத்தல் மற்றும் அதன் செயல்பாட்டை ஆராயாமல் இதை மிகப்பெரிய அளவில் தொடங்க முடியாது.

ஆரம்பத்தில் 500 உடலில் அணியும் காணொளிப் பதிவு கருவிகளை அறிமுகப்படுத்திய பின்னர், காவல்துறையின் பெரும்பகுதியை உள்ளடக்கும் வகையில் சுமார் 85,000 உடலில் அணியும் காணொளிப் பதிவு கருவிகளை உள்ளடக்கிய பெரிய திட்டத்தை நோக்கி நகர அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அனைத்துலக அறிவு மற்றும் அனுபவங்களை உள்வாங்கி சிறிலங்காவுக்கு ஏற்ற அணுகுமுறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, காவல்துறை சேவையை நவீனமயமாக்குதல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் அதிக பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக,உடலில் அணியும் காணொளிப் பதிவு கருவிகளை அறிமுகப்படுத்தவும், காவல்துறை சீருடைகளை மறுவடிவமைப்பு செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

புதிய சீருடை குறித்து வடிவமைப்பாளர்களுடன் அரசாங்கம் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், 500 உடலில் அணியும் காணொளிப் பதிவு கருவிகளுக்கான விலைமனுக் கோரப்பட்டிருந்தது.

காவல்துறை அமைப்புகளின் தகவல்களின்படி, ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்கப்பட்டு 15 வழங்குநர்கள் தயாரிப்பு மாதிரிகளை வழங்கியுள்ளனர்; அதேவேளையில், ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டுக் குழு அவற்றை இன்னும் பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.” – என்று குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை