இங்கிலாந்தில் பயிற்சி மருத்துவர்களின் ஓராண்டுகால போராட்டம் நிறைவு
இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்களின் ஓராண்டுகால வேலைநிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த அரசாங்கத்தின் சலுகையை ஏற்பதாக வாக்களித்துள்ள நிலையில் மருத்துவர்களின் தொடர் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இது தொடர்பில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தில், உள்ளூரில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் 2016 ஆம் ஆண்டின் வழக்கமான பயிற்சி மருத்துவர் ஒப்பந்த விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சராசரியாக 6.6 சதவிகித ஊதிய உயர்வு, ஏப்ரல் 2027-க்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என […]













