இலங்கை செய்தி

புதுப்பிக்கத்தக்க சக்தி துறைச் சவால்கள்: பிரான்ஸ் தூதுவருடன் சஜித் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையின் உள்நாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையின் உள்நாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறை எதிர்கொள்ளும் சவால்கள், சூரிய சக்தித் தொழில்முனைவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அத்துறையில் முதலீடுகளை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பிரான்ஸ் தூதரகத்தின் பொருளாதார ஆலோசகர் எம். பிலிப் பவுட், அரசியல் அதிகாரிகளான அனா பெலர்க், தினுஷா இலேபெரும மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையின் பங்குதாரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

2030ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யும் இலக்கு உட்பட, இலங்கையின் தேசிய புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

அரச கொள்கையின்படி ‘Net Metering’ மற்றும் ‘Net Accounting’ முறையிலிருந்து ‘Net-Plus’ திட்டத்துக்கு மாறுவது குறித்துத் துறைசார் பங்குதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றங்கள் சூரிய சக்தி தொழில்முனைவோருக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதோடு, முதலீடுகளின் சாத்தியக்கூறுகளையும் பாதித்துள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சூரிய சக்தியுடன் தொடர்புடைய அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் ஒழுங்குமுறைத் தடைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதோடு, முதலீடுகளுக்கு முன்னறிவிக்கக்கூடிய நிலையான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

பிரான்சின் அபிவிருத்தி முகவர் நிலையமான AFD ஊடாக இலங்கையில் முன்னுரிமை அளிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதிலும், பிரான்ஸ் முதலீட்டாளர்களுக்கும் இலங்கைத் தொழில்முனைவோருக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தூதுவரிடம் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க சக்தியை ஊக்குவிப்பது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாக அமைய வேண்டும் என்றும், நாட்டின் இலக்குகளை முன்னோக்கிக் கொண்டு செல்ல அரசு, முதலீட்டாளர்கள், தொழில்முறை பங்குதாரர்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை