ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள மாணவர்கள் போராட்டம் – பலர் காயம்

பிரான்ஸில் மாணவர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் நேற்றைய தினத்தில் இருந்து தீவிரமடைந்துள்ளன.

பல நகரங்களில் மாணவர்கள் குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைத்தும், பாடசாலைகளுக்கு வெளியே தடுப்புக் காவல் அமைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெரிசல் மிகுந்த வகுப்பறைகள், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பழுதடைந்த தளபாடங்கள் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி பிரான்ஸ் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிராந்தியக் கல்வி அதிகாரிகள், நிர்வாகத் தரப்பினர் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் தகவல்களின்படி, பல உயர்நிலைப் பாடசாலைகளின் அதிபர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சில் 15 முதல் 18 வயதுடைய மாணவர்கள் தங்கள் இடைநிலைக் கல்வியின் இறுதி மூன்று ஆண்டுகளைக் கழிக்கச் செல்லும் ‘லைசீ’ (lycées) எனப்படும் உயர்நிலைப் பாடசாலைகளில் நூற்றுக்கணக்கான மாணவர்களை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பல்கலைக்கழக மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.  நாடு முழுவதும் சுமார் 30 வளாகங்களுக்கான நுழைவுப் பாதைகளை அவர்கள் மறித்துள்ளனர்.

நேற்றில் இருந்து நாடு முழுவதும் 900 சாலை மறியல்கள் அல்லது அது தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், பாரிஸ், மார்சேய் மற்றும் பிற நகரங்களில் 160-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே இந்த போராட்டங்களை தீவிர இடதுசாரி கட்சியான ‘பிரான்ஸ் அன்போவ்ட்’ (LFI) ஊக்குவிப்பதாக ஆளும் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்