உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்து – இருவர் பலி

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கேட்டலினா தீவுக்கு அப்பால், நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து கடந்த புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் அன்றில் இருந்து காணாமல்போன ஐந்தாவது நபரை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலோரக் காவல் படை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் (divers) உள்ளிட்ட அவசரக்கால மீட்புக் குழுவினர், தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்