உலகம்

ஆறாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்திய சீனா?

  • June 30, 2026
  • 0 Comments

சீன அரசாங்கம் தனது அடுத்த தலைமுறை போர் விமானத்தின் முதல் அதிகாரப்பூர்வக் காட்சியை விளம்பரம் ஒன்றில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது J-36 ஆறாம் தலைமுறை மறைமுகத் தாக்குதல் விமானம் என்று பரவலாக நம்பப்படுகிறது. நேற்று வெளியிடப்பட்ட காணொளியொன்றில், இரு விமானிகள் H-6 குண்டுவீச்சு விமானத்தின் புனைப்பெயரான லியு யேவிற்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில் பேசிக்கொண்டிருந்தபோது ஜன்னல்களுக்கு வெளியே ஒரு விமானம் பறந்து செல்வது காண்பிக்கப்பட்டது. இந்த விரைந்து மறையும் காட்சியை, சீனாவின் ஆறாம் தலைமுறை போர் விமானத் திட்டத்தை […]

ஈரான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஐரோப்பா செய்தி

பிரான்ஸ், ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் அவசர ஆலோசனை

  • June 30, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, பிராந்திய அளவிலான தற்போதைய பதற்றங்கள் மற்றும் சர்வதேச மாற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட கருத்துக்கு […]

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை,, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதற்காக, இராணுவத்தின் களை களமிறக்கியுள்ளது. இலங்கை செய்தி

டெங்கு நுளம்புகளை கண்டுபிடிக்க இராணுவ ட்ரோன்கள்

  • June 30, 2026
  • 0 Comments

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை,, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதற்காக, இராணுவத்தின் களை களமிறக்கியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட 51,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், 31 பேர்உயிரிழந்துள்ளனர். டெங்கு வைரசைப் பரப்பும் நுளம்புகளின் வாழ்விடங்களைக் கண்டுபிடித்து அவற்றைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் கருவிகளைப் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நுளம்புக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட, நாடு தழுவிய மூன்று நாள் டெங்கு தடுப்புப் பரப்புரையின் ஒரு பகுதியாகவே இந்த ட்ரோன்கள் […]

Morocco's Ismael Saibari celebrates after scoring the winning penalty in the penalty shootout செய்தி விளையாட்டு

நெதர்லாந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது மொராக்கோ

  • June 30, 2026
  • 0 Comments

FIFA உலகக்கோப்பையின் மற்றொரு விறுவிறுப்பான ஆட்டத்தில், பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் மொராக்கோ அணி வீழ்த்தி ‘Round of 16’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி முறை கடைப்பிடிக்கப்பட்டது. கடந்த உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்ற மொராக்கோ, இந்த வெற்றியின் மூலம் தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. மறுபுறம், நெதர்லாந்து அணி தனது உலகக்கோப்பை வரலாற்றிலேயே இவ்வளவு […]

கடந்த மாதம் மெல்போர்னில் உள்ள மாசிடோனிய சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, முன்னாள் கட்சித் தலைவர் மேத்யூ காய் தன்னை ‘ஹெட்லாக்’ (Headlock - கழுத்தைப் பிடித்து நெரிப்பது) செய்து தாக்கியதாக மொய்ரா டீமிங் குற்றஞ்சாட்டினார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மன்னிப்பு கேட்க மறுத்த ஆஸ்திரேலிய பெண் எம்.பிக்கு பாடம் புகட்டிய கட்சி

  • June 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய, விக்டோரியா மாநில லிபரல் கட்சி எம்பி-யான Moira Deeming , சக கட்சி எம்பி மேத்யூ Matthew Guy மீது தான் சுமத்திய குற்றச்சாட்டிற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க மறுத்துள்ளதால், அவரது வேட்பாளர் தகுதி பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் வரவிருக்கும் நவம்பர் மாத தேர்தலில் அவர் போட்டியிடுவது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த மாதம் மெல்போர்னில் உள்ள மாசிடோனிய சமூக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, முன்னாள் கட்சித் தலைவர் மேத்யூ காய் தன்னை ‘ஹெட்லாக்’ (Headlock […]

பராகுவே அணியின் பயிற்சியாளர் குஸ்தாவோ அல்பாரோ (Gustavo Alfaro) வகுத்த தற்காப்பு உத்தி (Defensive masterclass), ஜெர்மனியின் வலுவான தாக்குதல் ஆட்டத்தை முற்றிலுமாக முடக்கியது. செய்தி விளையாட்டு

ஜெர்மனியின் கனவு தகர்ப்பு: வரலாற்று சாதனை படைத்தது பராகுவே

  • June 30, 2026
  • 0 Comments

நான்கு முறை உலக சாம்பியனான பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை பெனால்டி சுற்றில் வீழ்த்தி, பராகுவே அணி ‘ரவுண்ட் ஆஃப் 16’ (சுற்று-16) சுற்றுக்குத் தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. பராகுவே அணியின் பயிற்சியாளர் குஸ்தாவோ அல்பாரோ (Gustavo Alfaro) வகுத்த தற்காப்பு உத்தி (Defensive masterclass), ஜெர்மனியின் வலுவான தாக்குதல் ஆட்டத்தை முற்றிலுமாக முடக்கியது. ஆட்டத்தின் பெரும்பகுதி நேரம் பந்து ஜெர்மனி வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஜெர்மனி அணி பராகுவேயின் தற்காப்பு அரணை உடைக்க […]

சீனாவில் சொத்து விநியோகத் துறையில் (Property Developer) கொடிகட்டிப் பறந்த குவோ, அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிதி மோசடிகள் அம்பலம்: சீன தொழிலதிபருக்கு அமெரிக்காவில் 30 ஆண்டுகள் சிறை

  • June 30, 2026
  • 0 Comments

சீனாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் குவோ வெங்குய் (Guo Wengui)-க்கு, நிதி மோசடி வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர விமர்சகராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அமெரிக்காவில் வசிக்கும் சீன மக்களின் நம்பிக்கையைப் பெற்று இந்த பிரம்மாண்ட மோசடியை அவர் அரங்கேற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது. சீனாவில் சொத்து விநியோகத் துறையில் (Property Developer) கொடிகட்டிப் பறந்த குவோ, அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் நெருங்கிய […]

உலகம்

நைஜீரியாவில் பரீட்சை எழுதிய மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

  • June 29, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள மேல்நிலை பாடசாலையொன்றில்  துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவர்களை கடத்திச் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினர் குறித்த குழுவினரை  பின்தொடர்ந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இராணுவ வீரர் ஒருவரும், துணை ராணுவ ஆதரவுப் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 10 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை இராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அதேநேரம் இன்னும் சில மாணவர்கள் காணாமல்போயுள்ளதாகவும், எத்தனை பேர் காணாமல் […]

இலங்கை முக்கிய செய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றம்!

  • June 29, 2026
  • 0 Comments

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ளது. இதன்படி ஆட்டோ டீசலின் விலை ஒரு லீட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டு 382 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பெட்ரோல் 92 ஆக்டேன் விலையும் லீட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டு 414 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சூப்பர் டீசல், பெட்ரோல் 95 ஆக்டேன் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பில் வரவுள்ள அதிரடி மாற்றம் : இனி தொலைபேசி எண் தேவையில்லை

  • June 29, 2026
  • 0 Comments

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த சில மாதங்களில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால்,  உலகெங்கிலும் உள்ள 3 பில்லியன் பயனர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கட்டாயமில்லை எனவும் விரும்புபவர்கள் மட்டுமே தங்களுக்கு விருப்பமான பயனர்பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பயனர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயனர்பெயரை எப்போது வேண்டுமானாலும் […]