ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

RAF Fairford சம்பவம்: ஈரான் வம்சாவளி இளைஞன் லண்டனில் கைது

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் ஈரானைக் குறிவைக்கப் பயன்படுத்தும் பிரித்தானியாவின் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் , பிரித்தானியா -ஈரான் குடியுரிமை பெற்ற 25 வயது நபர் ஒருவரைப் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் ஈரானைக் குறிவைக்கப் பயன்படுத்தும் பிரித்தானியாவின் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் , பிரித்தானியா -ஈரான் குடியுரிமை பெற்ற 25 வயது நபர் ஒருவரைப் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்கு பிரித்தானியாவில் உள்ள RAF Fairford விமானப்படைத் தளத்திற்கு அருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 20 வயதிற்குட்பட்ட 5 பிரித்தானிய இளைஞர்களைப் பயங்கரவாதத் தடை மற்றும் வெடிபொருள் சட்டங்களின் கீழ் பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும், இந்தச் சதியில் ஏதேனும் வெளிநாட்டுச் சக்தியின் தலையீடு இருக்கிறதா என்பது குறித்து பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே,பிரித்தானியா பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) இச்சம்பவத்தில் ஈரானுக்குத் தொடர்பிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றவை என மறுத்துள்ள ஈரான், இவ்விவகாரம் தொடர்பாக தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதருக்குச் சம்மன் அனுப்பித் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, லண்டனில் வைத்து 25 வயதான இரட்டை குடியுரிமை நபரைப் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

இது குறித்துப் பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸ் பிரிவின் மூத்த தேசிய ஒருங்கிணைப்பாளர் விக்கி எவன்ஸ் கூறுகையில், “குளோஸ்டர்ஷையர் (Gloucestershire) பகுதியில் நடந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணை மிகவும் சிக்கலானது. எங்களது நிபுணர் குழுக்கள் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். மேலும், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவும் (Marco Rubio) இச்சம்பவத்தின் பின்னணியில் “ஒரு வெளிநாட்டுச் சக்தியின் கைவரிசை” இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி