பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி Reform UK கட்சியின் தலைவரான நைஜல் பராக்கின் (Nigel Farage) இரு மூத்த உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பா செய்தி

Reform UK கட்சிக்கு நெருக்கடி: முக்கிய இரு பிரமுகர்கள் ராஜினாமா

  • September 4, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி Reform UK கட்சியின் தலைவரான நைஜல் பராக்கின் (Nigel Farage) இரு மூத்த உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். வெளிநாட்டு நன்கொடையாளர் ஒருவர் மூலம் அரசியல் கருத்துக்கணிப்புக்கான நிதியைப் பெற வழிவகை செய்து, நாட்டின் தேர்தல் சட்டத்தை இக்கட்சி மீறியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், கட்சி எந்தவொரு தவறும் செய்யவில்லை என மறுத்துள்ளதோடு, காலநிலை மாற்ற ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டத்திற்கே (Hoax) […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரை அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப ஒப்பந்தம்

  • September 4, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்கு வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸுக்கே திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் ஒன்றில், பிரித்தானியாவின் சீர்த்திருத்த கட்சி மற்றும் பிரான்சின் தேசிய பேரணிக் கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளாக, பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் போராடி வருகின்றன. இதனை அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இந்நிலையில்  இங்கிலாந்து நகரமான பர்மிங்காமில் நடைபெற்ற சீர்திருத்தக் கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பேசிய பர்டெல்லா Bardella ,  […]

கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். செய்தி

கச்சத்தீவு இலங்கையின் சொத்து: தமிழக அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதிலடி

  • September 4, 2026
  • 0 Comments

கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (04) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பயணம் கச்சத்தீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல. மாறாக, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் […]

உலகம் வாழ்வியல்

மருத்துவ உலகில் புதிய மைல்கல் – பன்றியின் சிறுநீரகத்துடன் 09 மாதங்கள் வாழந்த நபர்

  • September 4, 2026
  • 0 Comments

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்ட நபர் ஒருவர் 09 மாதங்கள் டயாலிசிஸ் இல்லாமல் வாழ்ந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2025 ஜனவரி மாதம் 66 வயதான டிம் ஆண்ட்ரூஸ் என்பவருக்கு ஜெனரல் பிரிகாம் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவ் அறுவை சிகிச்சையானது மனிதரின் சிறுநீரகம் ஒன்றை பெறும்வரை தற்காலிகமாக இயங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் தற்போது 09 மாதங்கள் டயாலிசிஸ் இல்லாமல் சிறப்பாக இயங்கிவருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பன்றியின் சிறுநீரகத்துடன் […]

உலகம்

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சியில் நெதன்யாகு அரசாங்கம்

  • September 4, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டத்தை இரு வலதுசாரி அமைச்சர்கள் முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் ( Ben-Gvir) “தன்னார்வக் குடிபெயர்வு” மூலம் காசா மக்களை வெளியேற்றுவதற்கான ஏழாண்டுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அடுத்த அரசாங்கத்தில் “குடிபெயர்வுக்குப் பொறுப்பான ஒரு அமைச்சகத்தை” உருவாக்க முயல்வதாகவும் அவர் கூறினார். அமைதி குறித்த மாயைகளுக்குப் பதிலாக, இப்போது குடிபெயர்வுக்கான நடவடிக்கைகள் தேவை,” என்று கூறிய […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் உத்தரவு

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த விளக்கமறியல் உத்தரவை வழங்கினார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் சமர்ப்பணங்கள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை […]

ஐரோப்பா

நேபாளத்திற்கு மற்றொரு சுற்று உதவி – காத்மாண்டு பறந்த இந்திய விமானங்கள்

  • September 4, 2026
  • 0 Comments

நேபாளத்திற்கு, மற்றொரு தொகுதி மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 21.5 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த இந்திய விமானப்படையின் 6 மற்றும் 7-வது சிறப்பு விமானங்கள் ஏற்கனவே காத்மாண்டு வந்தடைந்துள்ளன. இந்த சமீபத்திய தொகுதி நிவாரணப் பொருட்களில் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடயவியல் மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் அடங்கும் என்று கூறப்படுகிறது. தொடர்புடைய உதவித் தொகுதி, நேபாளத்தின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஹாரி மற்றும் மேகன் தப்பதியினரை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

  • September 4, 2026
  • 0 Comments

இளவரசர் ஹாரியின் சுயசரிதை நூல் வெளியானதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், மேகன் மார்க்லை ஒரு  “horrible influence” என்று விமர்சித்துள்ளார். அத்துடன் தான் மன்னர் சார்லஸாக இருந்திருந்தால் அந்தத் தம்பதியினரை மீண்டும் வரவேற்றிருக்க மாட்டேன் என்றும் கூறினார். அதேவேளை சசெக்ஸ் கோமகன் மற்றும் கோமகள் தம்பதியினரின் பகிரங்கமான குறைகள் இருந்தபோதிலும், அவர்களுக்கு சமாதானக் கரம் நீட்டியதற்காக மன்னர் சார்லஸை […]

உலகம்

நைஜீரியாவில் எண்ணெயை திருட முயன்றபோது ஏற்பட்ட விபத்து – 37பேர் உயிரிழப்பு

  • September 4, 2026
  • 0 Comments

நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வழியாக வெளியேறிய எண்ணெயை சுவாசித்த 37 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுச்சூழல் குழு இன்று இந்த தகவலை வெளியிட்டது. இருப்பினும், அதிகாரிகள் இந்த உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை. இந்தச் சம்பவம் ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள ஒக்ரிகா என்ற இடத்தில் நடந்ததாக இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவு மையம் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெயைத் திருட முயன்றபோது பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. “இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கண்டறியவும், உண்மைகளை உறுதிப்படுத்தவும் விசாரணை நடைபெற்று வருகிறது,” […]

இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும், அப்போது வயதில் மூத்தவர்கள் பொறுப்புகளைக் குறைந்து இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா செய்தி

இந்திய அமைச்சரவை நாளை மறுசீரமைப்பு? இளம் தலைமுறையை கவர வியூகம்!

  • September 4, 2026
  • 0 Comments

இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும், அப்போது வயதில் மூத்தவர்கள் பொறுப்புகளைக் குறைந்து இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கம் முடிவுக்கு வருதாகத் தெரிகிறது. ஆகஸ்ட் 26-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர், “அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சந்திப்போம்” எனக் கூறியதாகத் தெரிகிறது. முன்னதாக, […]