இந்தியா செய்தி

இந்திய அமைச்சரவை நாளை மறுசீரமைப்பு? இளம் தலைமுறையை கவர வியூகம்!

இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும், அப்போது வயதில் மூத்தவர்கள் பொறுப்புகளைக் குறைந்து இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும், அப்போது வயதில் மூத்தவர்கள் பொறுப்புகளைக் குறைந்து இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்டு வந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கம் முடிவுக்கு வருதாகத் தெரிகிறது. ஆகஸ்ட் 26-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர், “அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சந்திப்போம்” எனக் கூறியதாகத் தெரிகிறது. முன்னதாக, சர்வதேச நாடுகளுடன் கூட்டங்கள், நேபாள வெள்ளம் என பல்வேறு முக்கியப் பணிகளால் மத்திய அரசு பணிச்சுமையில் சிக்கியிருந்தது.

இதனால், அமைச்சரவை மாற்றத்திற்கு நாள் குறிக்கப்படாமல் இருந்தது. தற்போது செப்டம்பர் 5 அல்லது 6-ம் திகதி இந்த மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜென்ஸீ தலைமுறையைக் கருத்தில் கொண்டு, இம்முறை அமைச்சரவையில் 24 இளைஞர்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் பெண்களின் எண்ணிக்கையும் அமைச்சரவையில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, 70 வயதுக்கு மேற்பட்ட 12 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், தனிப்பொறுப்பு வகிக்கும் இணையமைச்சர்களாகவும் உள்ளனர்.

81 வயதான ஜிதன் ராம் மாஞ்சி உள்ளிட்ட வயதில் மூத்தவர்கள் 14 பேர் அமைச்சரவையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோரை அகற்றி அவர்களுக்கு கட்சி நிர்வாகம் மற்றும் மாநிலங்களில் கட்சிப் பொறுப்பை அளிக்கத் திட்டமிடப்படுகிறது.

செயல்திறன் அடிப்படையில் தற்போதைய அமைச்சர்கள் பலரை நீக்கவும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய அங்கமாக உள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி