செய்தி

கச்சத்தீவு இலங்கையின் சொத்து: தமிழக அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதிலடி

கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (04) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பயணம் கச்சத்தீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல.

மாறாக, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

குறிப்பாக, இந்தியாவிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி வரும் இழுவைப்படகுகளினால் வடக்கு கடற்பரப்பின் கடல்வளம் பாரியளவில் பாதிக்கப்படுவதுடன், வடபகுதி மீனவர்களின் தொழிலும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது, கடல்வளத்தைப் பாதுகாப்பது மற்றும் இலங்கையின் கடல் எல்லையை உறுதியாகப் பாதுகாப்பது தொடர்பான விடயங்களுக்கே இருதரப்பு கலந்துரையாடல்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

கச்சத்தீவு தொடர்பில் தமிழக சட்டமன்றத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் விவாதங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், கச்சத்தீவு இலங்கையின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்டது என்பதில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமில்லை எனத் தெரிவித்தார்.

சர்வதேச சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக அரசியல்வாதிகள் தங்கள்மீது எழுந்துள்ள அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், தங்களது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்கும் கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் மீண்டும் அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இக்கோரிக்கைகளுக்கு பின்னால் எந்தவிதமான புதிய இராஜதந்திர அல்லது சட்டபூர்வ உண்மையும் இல்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி