இலங்கை

யாழில் அதி வேகத்தால் நிகழ்ந்த சோகம் – இரு இளைஞர்கள் மரணம்

யாழ்ப்பாணம், அளவெட்டியில் இன்று (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுன்னாகத்தைச் சேர்ந்த 17 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அளவெட்டிச் சந்திக்கு அருகில், அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்ததன் விளைவாக, அது வீதியோரத்தில் இருந்த சுவரொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்திலேயே இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்