உலகம்

எல் நினோ தாக்கம் – பனாமாவில் அவசரநிலை அறிவிப்பு, கப்பலின் எண்ணிக்கையும் குறைப்பு

  • September 5, 2026
  • 0 Comments

எல் நினோ வானிலை நிகழ்வால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, பனாமா கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்வாய்க்கு நீர் வழங்கும் இரண்டு செயற்கை ஏரிகளில் நீர்மட்டம் குறைந்ததால் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பனாமா கால்வாய் ஆணையம் கூறியது. இதற்கமைய கப்பல்களின் எண்ணிக்கை 36 இல் இருந்து 32 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே எல்நினோ காரணமாக பனாமா நாடு தழுவிய அசரநிலையையும் பிறப்பித்துள்ளது. நாற்பது […]

நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கையில் சமையல் எரிவாயு விலை குறைப்பு

  • September 5, 2026
  • 0 Comments

நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார். இதற்கமைய 12.5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 4,365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.3 கிலோ கிலோ […]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார். இலங்கை செய்தி

08 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • September 5, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, ​​இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இலங்கை தலைவர்களுடன் அவர் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார். […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற 05 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைவு

  • September 5, 2026
  • 0 Comments

சட்டப்பூர்வ குடியுரிமை இல்லாத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு அனுப்ப 05 நாடுகள் இணைந்து தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளன. இதற்கமைய குறித்த நாடுகள் ஒப்பந்தம் ஒன்றையும் கையெழுத்திட எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் க்ரீஸ் ஆகிய நாடுகளே மேற்படி தீர்மானத்தை எட்டியுள்ளன. இருப்பினும் திருப்பி அனுப்பும் மையங்களை அமைக்க எதிர்பார்க்கும் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. “திருப்பி அனுப்பும் மையங்களை நிறுவ வழிவகுக்கும் ஒரு ஒப்பந்தத்தை இந்த ஆண்டு மூன்றாம் நாடுகளுடன் […]

உலகம்

சமாதானப் பேச்சுவார்த்தை – உக்ரைன் மற்றும் ரஷ்யா செல்லும் அமெரிக்க தூதர்கள்

  • September 5, 2026
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் வேகம் பெற்றுவரும் நிலையில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரத்தின் இறுதியில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்க தூதர்கள் இன்றைய தினம் மொஸ்கோ செல்வார்கள் எனவும், நாளைய தினம் உக்ரைனுக்கு செல்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவந்து சமாதானத்தை ஏற்படுத்தும் ட்ரம்பின் முயற்சிகளுக்கு இவ்விரு தூதர்களும் தலைமை தாங்குகின்றனர். இதற்கிடயே நேற்றைய தினம் கீவ்வில் உள்ள […]

உலகம்

இஸ்ரேல் அதிரடி – அலி அல்-தாஹெர் மலையில் இருந்து ஹிஸ்புல்லா போராளிகள் வெளியேற்றம்

  • September 5, 2026
  • 0 Comments

லெபனானில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் Ali al-Taher  மலைத்தொடரின் அடிவாரத்தில் இருந்த சுரங்கத்தில் இருந்து போராளிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று இந்த தகவலை வெளியிட்டார். இருப்பினும், ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு உடனடியாக இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஜூன் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், குறித்த மலைத்தொடரில் இருந்த சுரங்கப்பாதையில்  போராளிகள் பதுங்கியிருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அந்த மலைத்தொடருக்குள் உள்ள தனது […]

உலகம் முக்கிய செய்திகள்

ஈரானின் பிக்காக்ஸ் மலையை தாக்க அமெரிக்கா திட்டம்

  • September 5, 2026
  • 0 Comments

ஈரானின் பிக்காக்ஸ் மலையை அமெரிக்கா மிக விரைவில் தாக்கக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஈரானின் கடுமையாக சேதமடைந்த நடன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் ஆலைக்கு அருகில் இந்த மலை அமைந்துள்ளது, இது ஆழமாகப் புதைக்கப்பட்ட இரண்டு சுரங்கப்பாதை வளாகங்களைக் கொண்ட, மிகவும் பலப்படுத்தப்பட்ட  தளமாகவும் காணப்படுகிறது.

ஐரோப்பா

ஸ்பெயினை தாக்கும் வெப்ப அலை – காட்டுத்தீ அபாயம்

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலையானது 43 டிகிரி செல்சியஸ் வரை   உயரக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டின் தெற்று மற்றும் மேற்கு பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீவிர வெப்ப அலை காரணமாகக் காடுகளில் தீ விபத்து ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் வெப்பநிலைக்கு ஏற்றவாறு நீரேற்றத்துடன் இருக்கவும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

இலங்கை

கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர்விநியோகம் தாமதமாகும்

  • September 4, 2026
  • 0 Comments

கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று (04) இரவு 8:00 மணி வரை அமலில் இருந்த நீர் விநியோகத் துண்டிப்பு, இன்று (04) இரவு 11:30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் நுகேகொட, கொஹுவல, தெஹிவல, மவுண்ட் லவினியா, ரத்மலன, மொரட்டுவ, ராவத்தவத்த, சொய்சபுர, […]

உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போர், மோசமான வானிலையால் உலகளவில் உச்சம் தொட்ட உணவுப் பொருட்களின் விலை

  • September 4, 2026
  • 0 Comments

உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மோசமான வானிலை மாற்றம் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் இடையூறுகள் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளதாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் மாதாந்த விலை மாற்றங்களைக் கண்காணிக்கும் ஐ.நா.வின் […]