உலகம்

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சியில் நெதன்யாகு அரசாங்கம்

இஸ்ரேலில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டத்தை இரு வலதுசாரி அமைச்சர்கள் முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் ( Ben-Gvir) “தன்னார்வக் குடிபெயர்வு” மூலம் காசா மக்களை வெளியேற்றுவதற்கான ஏழாண்டுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

அடுத்த அரசாங்கத்தில் “குடிபெயர்வுக்குப் பொறுப்பான ஒரு அமைச்சகத்தை” உருவாக்க முயல்வதாகவும் அவர் கூறினார்.

அமைதி குறித்த மாயைகளுக்குப் பதிலாக, இப்போது குடிபெயர்வுக்கான நடவடிக்கைகள் தேவை,” என்று கூறிய அவர், “அவர்கள் சுரங்கங்கள் தோண்டுவதற்குப் பதிலாக, பயணப் பைகளை எடுத்துக்கொண்டு கிளம்ப வேண்டிய நேரம் இது என்றும் கூறினார்.

இந்த திட்டத்திற்காக துருக்கி, எத்தியோப்பியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகியவை சாத்தியமான இடங்களாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்