அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்கு சித்திரவதை: அரசு மறுப்பு!

  • June 9, 2026
  • 0 Comments

சிஐடி தடுப்பு காவலின்கீழ் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பட்டன. இவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் […]

இலங்கை செய்தி

அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

  • June 9, 2026
  • 0 Comments

அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில் ம் 128 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 135 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. 

இலங்கை

கைதுக்குப்பின் சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் குறித்து UNP கரிசனை!

  • June 9, 2026
  • 0 Comments

அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கவலைகளை எழுப்பியுள்ளதுடன், அவருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், சுரேஷ் சல்லே, இலங்கைச் சட்டம் மற்றும் சர்வதேச […]

இலங்கை செய்தி

முன்னாள் பிரதி அமைச்சருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!

  • June 9, 2026
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இன்று 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இவற்றுடன், அவருக்கு 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சரண குணவர்தன தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்தச் சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்ததில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அவருக்கு எதிராக நான்கு […]

ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

உக்ரைன்மீதான தாக்குதலை நிறுத்துமாறு முக்கிய இரு நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம்!

  • June 9, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையிலான 3 ஆவது பாதுகாப்பு கொள்கை ஆலோசனை கூட்டம் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்றது. இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இரு நாடுகளும் தங்களது பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நலன்களின் அடிப்படையில், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில் நெருக்கமாகச் செயல்பட இக்கூட்டத்தில் உறுதியேற்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் […]

உலகம்

“தனித்து போராட வேண்டியிருக்கும்” – நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்!!

  • June 9, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஈரானுடன் மீண்டும் போரைத் தொடங்கினால், அந்த நாடு தனித்துப் போராட வேண்டியிருக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்துள்ளார். கடந்த வாரம் இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த காரசாரமான தொலைபேசி உரையாடல் குறித்து செய்தி வெளியிட்ட Axios செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஈரானுக்கு எதிரான முழுமையான வெற்றியை அமெரிக்கா அறிவிக்கும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட […]

இந்தியா செய்தி

இரும்பு ஆலையில் தீ விபத்து: 9 தொழிலாளர்கள் பலி!

  • June 9, 2026
  • 0 Comments

ஆந்திராவின் விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 4.15 மணிக்கு, எஸ்எம்எஸ் -2 கிடங்கில் இருந்து எஸ்டிசி – 3 க்கு 1500 டிகிரி வெப்பத்தில் உருக்கிய இரும்பு குழம்பை ராட்சத […]

இலங்கை செய்தி

சுரேஷ் சலே தொடர்பான விசாரணை – CIDஇற்கு அழைப்பு!

  • June 9, 2026
  • 0 Comments

சுரேஷ் சலே தொடர்பான தொடர்பான  விசாரணைகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. சுரேஷ் சலேயின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் தகவல் கோர மனித உரிமை ஆணைக்குழு முன்னதாகவே சி.ஐ.டிக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும், சி.ஐ.டியினர் மற்றொரு திகதியை கோரியிருந்தனர். இந்நிலையில் சுரேஷ் சலே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மீளவும் […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்காக ‘புலிப்புராணம்’ ஓதுகிறது மஹிந்த அணி!

  • June 9, 2026
  • 0 Comments

” புலி டயஸ்போராக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே சுரேஷ் சலே இலக்குவைக்கப்பட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” பயங்கரவாத தடைச்சட்டம் தவறானது என சுட்டிக்காட்டியே ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தது. ஆனால் அச்சட்டத்தை பயன்படுத்தியே சுரேஷ் சலேவை தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் […]

ஐரோப்பா

இணையத்தில் பாலியல் துஷ்பிரயோகம் : புதிய சட்டங்களை கொண்டுவர ஸ்டாமர் முயற்சி!

  • June 8, 2026
  • 0 Comments

“இணையத்தில் குழந்தைகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படும்போது அரசாங்கம் வேடிக்கை பார்க்காது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் கடுந் தொனியில் எச்சரித்துள்ளார். குழந்தைகள் ஆபாசப் படங்களை அனுப்புவதையோ அல்லது பெறுவதையோ தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு இல்லையென்றால்  சில மாதங்களுக்குள் புதிய சட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற லண்டன் டெக் வீக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது […]