உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘போர்க்குற்றம்’- ஐ.நாவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்தது ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களை ஈரான், சர்வதேச கடல்சார் அமைப்பிடம் (IMO) சமர்ப்பித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களை ஈரான், சர்வதேச கடல்சார் அமைப்பிடம் (IMO) சமர்ப்பித்துள்ளது.

இந்த ஆதாரங்கள், சர்வதேச கடல்சார் அமைப்பின் உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்காக உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

லண்டனில் நவம்பர் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் சபைக் கூட்டத்தில், ‘முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பு’ என்ற 11ஆவது நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த ஆதாரங்கள் ஆராயப்படவுள்ளன.

கடல்சார் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கடல்சார் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்கள் விபத்துகளுக்கான ஆபத்தை அதிகரிப்பதுடன், மீட்பு வசதிகள் அழிக்கப்படுவது அவசரகால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திறனையும் பாதிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் அரச செய்தி நிறுவனமான IRNA இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி