ஐரோப்பா செய்தி

Reform UK கட்சிக்கு நெருக்கடி: முக்கிய இரு பிரமுகர்கள் ராஜினாமா

பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி Reform UK கட்சியின் தலைவரான நைஜல் பராக்கின் (Nigel Farage) இரு மூத்த உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி Reform UK கட்சியின் தலைவரான நைஜல் பராக்கின் (Nigel Farage) இரு மூத்த உதவியாளர்கள் வெள்ளிக்கிழமை தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

வெளிநாட்டு நன்கொடையாளர் ஒருவர் மூலம் அரசியல் கருத்துக்கணிப்புக்கான நிதியைப் பெற வழிவகை செய்து, நாட்டின் தேர்தல் சட்டத்தை இக்கட்சி மீறியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், கட்சி எந்தவொரு தவறும் செய்யவில்லை என மறுத்துள்ளதோடு, காலநிலை மாற்ற ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டத்திற்கே (Hoax) தாம் பலியாகியிருப்பதாகக் தெரிவித்துள்ளது.

அதேவேளை, முறைகேடான வெளிநாட்டு நன்கொடைகளை பிரித்தானிய இடைத்தரகர் ஊடாகப் பெற முயற்சித்தது உள்ளிட்ட சாத்தியமான குற்றவியல் மீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஆளும் தொழிற்கட்சி (Labour Party) பொலிஸாரிடம் எழுத்துப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

Reform UK கட்சியின் வருடாந்த மாநாடு தொடங்குவதற்குச் சற்று முன்னதாக Channel 4 ஊடகம் இந்த இரகசிய புலனாய்வுச் செய்தியை வெளியிட்டது. அக்கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று கருத்துக்கணிப்புகளுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மூலம் 30,000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையைச் செலுத்துவதற்கு கட்சியின் இரு மூத்த முக்கிய புள்ளிகள் வழிவகை செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நன்கொடைகளுக்குத் தடை விதிக்கும் பிரித்தானிய அரசியல் நிதிச் சட்டங்களை இத்தகைய நடவடிக்கைகள் மீறக்கூடும்.

‘வெர்பேட்டிம்’ (Verbatim) என்ற புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த இரகசியப் புலனாய்வாளர்கள், பிரித்தானியத் தொடர்புகளைக் கொண்ட அமெரிக்கப் பணக்கார நன்கொடையாளர்களைப் போல நடித்து, சுமார் ஒரு வருட காலமாக Reform UK கட்சியின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன் உச்சக்கட்டமாக பராக்குடன் மதிய உணவுச் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

காலநிலை அறிக்கை மையத்தின் (Centre for Climate Reporting) ஊடகவியலாளர்களால் தொடங்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பே ‘வெர்பேட்டிம்’ என்றும், இரகசியமாகப் பதிவுசெய்யப்பட்ட காணொளிகள் உட்பட அவர்களின் கண்டுபிடிப்புகளைத் தாம் சரிபார்த்துள்ளதாகவும் ‘சேனல் 4’ தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி