இந்தியா இலங்கை செய்தி

எல்லை தாண்டிய 7 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏழு இந்திய மீனவர்கள் படகுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏழு இந்திய மீனவர்கள் படகுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தலைமன்னாருக்கு வடக்கே அமைந்துள்ள இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை வடமத்திய கடற்படை கட்டளையகம் கண்காணித்தது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ஒரு இந்திய மீன்பிடிப் படகுடன் அதிலிருந்த ஏழு இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடிப் படகுடன் இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குதுறைக்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை