இந்தியா

நேபாளத்தின் ஆழமான ஏரிக்கு மலையேற்றம் – 06 இந்தியர்கள் மாயம்

நேபாளத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 06 இந்திய சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஆறு பேரும் நேபாளத்தின் ஆழமான ஏரியான  ஷே போக்சுண்டோவிற்கு செல்வதற்காக மலையேற்றத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் பனிப்பொழிவில் சிக்கி அவர்கள் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் அடங்குவர். அவர்களை கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஒரு ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட முகமையிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே