இலங்கை

பல்லேகெல தும்பர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு – கைதி உயிரிழப்பு

பல்லேகெல தும்பர சிறைச்சாலையில் கைதி  ஒருவர் துப்பாக்கிச்சூட்டு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த கைதி சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த வேளையில் சிறை அதிகாரி ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக பல்லெதென்ன, குறித்த கைதி சிறைச்சுவருக்கு அருகிலுள்ள பாதுகாப்பு கோபுரத்தின் மீது ஏறி, பணியிலிருந்த அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் அந்த அதிகாரி கைதியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

அவர் தும்பர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்