ஐரோப்பா

ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • October 28, 2026
  • 0 Comments

ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஸ்பெயினில் நடந்த இரண்டாவது கொடிய ரயில் விபத்து இதுவாகும். மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆகவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிவப்பு சமிக்ஞை செயலில் இருந்தபோதிலும், ரென்ஃபே ரயில் தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டதால், இந்த கோர விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்புடைய செய்திகள் ஸ்பெயினில் […]

உலகம்

ருவாண்டா பாதுகாப்பு அமைச்சகம் மீது தடை விதித்தது அமெரிக்கா

  • October 28, 2026
  • 0 Comments

ருவாண்டாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது அமெரிக்கா இன்று தடை விதித்துள்ளது. அமெரிக்க நிதித்துறையின் இணையதளத்தில் இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசு தொடர்பான புதிய தடைகளின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முன்னேறிய AFC/M23 கிளர்ச்சியாளர்கள், காங்கோவின் வடக்கு மற்றும் தெற்கு கிவு மாகாணங்களின் பெரும் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்த முன்னேற்றத்தின் போது, ​​கிழக்கு காங்கோவின் மிகப்பெரிய இரண்டு நகரங்களையும் அவர்கள் கைப்பற்றினர். […]

ஐரோப்பா

போர்த்துகளில் கடுமையான வீட்டுவசதி நெருக்கடி – அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

  • October 28, 2026
  • 0 Comments

தீவிரமடைந்து வரும் வீட்டுவசதி நெருக்கடி மற்றும் வீட்டுவசதி ஆர்வலர்களுக்கு எதிரான சமீபத்திய காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்த்துகளின் தலைநகரான லிஸ்பனின் நேற்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மிகக் கடுமையான வீட்டு விலை கட்டுப்படியாகாத நெருக்கடிகளில் ஒன்றை போர்ச்சுகல் எதிர்கொள்கிறது. 2017 ஆம் ஆண்டிலிருந்து விலைகள் இரண்டு மடங்கிற்கும் மேலாகவும், புதிய குத்தகை வாடகைகள் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகவும் உயர்ந்துள்ளன. ஊதியங்கள் அதற்கேற்ப உயரவில்லை என்பதால், இது இளைஞர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. இந்நிலையில் இதனை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புதிய ஐபோன் டியோவின் திரைகளில் குறைப்பாடு – ஆப்பிள் நிறுவனம் வழங்கிய உறுதிமொழி

  • October 28, 2026
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய தொலைபேசியான புதிய ஐபோன் டியோவின் சில திரைகளில் குறைபாடுகள் உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. குறைபாடுள்ள தொலைபேசிகளுக்குப் பதிலாக புதிய தொலைபேசிகளை வழங்குவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐபோன் டியோ, உலகெங்கிலும் உள்ள பல வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதால், ஆன்லைனில் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. ஒரு புத்தகம் போல மடிக்க வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தொலைபேசி மாடலின் உற்பத்தி செயல்முறையின் சிக்கலான தன்மை, விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் என்று […]

இந்தியா

இந்தியாவை உலுக்கிய ஆர்னாப் புயல் – 05 பேர் உயிரிழப்பு

  • October 28, 2026
  • 0 Comments

வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவை நோக்கி நகர்ந்துள்ள ‘ஆர்னாப்’ புயலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று (28) அதிகாலை ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு நுழைந்த இந்தபுயல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 06  மணிநேரம் இதன் தாக்கம் நீடித்ததாக கூறப்படுகிறது. பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தத்தில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம்

ஈரான் போர் – 47 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ள அமெரிக்கா

  • October 28, 2026
  • 0 Comments

ஈரானில் போரை நடத்துவதற்காக அமெரிக்க இராணுவம் இதுவரை 47 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது, ரொய்டர்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதற்கமைய ஜூலை மாதத்தில் பாதுகாப்புத் துறை வெளியிட்ட மதிப்பீட்டை விட செலவு 25 சதவீதம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பென்டகன் இது தொடர்பில் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை. வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இடைக்கால தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த கருத்து கணிப்பு வெளியாகி அதிர்வலைகளை […]

ஐரோப்பா

ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்து – 39 பேர் பலி

  • October 28, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்று காலை 9.00 மணிக்கு சற்ற பின்பு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாட்ரிட்டை தெற்கு அந்தலூசியா பிராந்தியத்துடன் இணைக்கும் ரயில் பாதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிறுவனமான அடிஃப் (Adif) தெரிவித்துள்ளது. அத்துடன் அவசர மருத்துவ குழுக்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான […]

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமான டாடா குழுமத்தில் நிலவும் நிர்வாகப் போட்டி தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “டாடா குழுமம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது. ஆனால், எந்தவொரு வர்த்தகத் தலைவரும் இதுகுறித்துப் பேசத் துணியவில்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியா செய்தி

டாடா குழுமம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது; நீதியை நிலைநாட்டுவோம்

  • October 28, 2026
  • 0 Comments

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமான டாடா குழுமத்தில் நிலவும் நிர்வாகப் போட்டி தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “டாடா குழுமம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது. ஆனால், எந்தவொரு வர்த்தகத் தலைவரும் இதுகுறித்துப் பேசத் துணியவில்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பைத் என். சந்திரசேகரன் தொடர்ந்து வகிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், ராகுல் காந்தி இன்று (28) தனது எக்ஸ் சமூக வலைத்தளப் […]

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் மற்றும் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே ஆகியோர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த உரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சமரச முயற்சி: நோர்வே, பின்லாந்து தலைவர்கள் புடினுடன் பேச்சு

  • October 28, 2026
  • 0 Comments

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் மற்றும் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே ஆகியோர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த உரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கியதிலிருந்து, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பெரும்பாலும் புடினுடன் நேரடித் தொடர்புகளைத் தவிர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், பின்லாந்து மற்றும் நோர்வே தலைவர்களின் இந்த […]

இந்தியாவின் தேசிய கீதமான வந்தே மாதரம் 121 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வினைல் இசைத்தட்டு வடிவில் Vinyl Record) வெளியாகியுள்ளது. இலங்கை செய்தி

121 ஆண்டுகளுக்குப் பிறகு வினைல் இசைத்தட்டில் மீண்டும் ஒலிக்கிறது ‘வந்தே மாதரம்’

  • October 28, 2026
  • 0 Comments

இந்தியாவின் தேசிய கீதமான வந்தே மாதரம் 121 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வினைல் இசைத்தட்டு வடிவில் Vinyl Record) வெளியாகியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் ஹரிஹரன், ‘தி ஆன்தம் – வந்தே மாதரம்’ என்ற சிறப்பு வினைல் இசைத்தட்டுப் பதிப்பை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கையளித்துள்ளார். இந்த நிகழ்வு, இந்தியாவின் புதுடில்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஹரிஹரனின் குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளாக இணைந்து ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர். இசைத்தட்டுடன் அதற்கென பிரத்யேகமாக […]