ஈரான் போர் – 47 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ள அமெரிக்கா
ஈரானில் போரை நடத்துவதற்காக அமெரிக்க இராணுவம் இதுவரை 47 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
ரொய்டர்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய ஜூலை மாதத்தில் பாதுகாப்புத் துறை வெளியிட்ட மதிப்பீட்டை விட செலவு 25 சதவீதம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பென்டகன் இது தொடர்பில் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.
வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இடைக்கால தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த கருத்து கணிப்பு வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




