சக விமானியின் தாக்குதலை எதிர்த்துப் போராடி, விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய flydubai விமானத்தின் தலைமை விமானி ஸ்மித் மச்சார் உள்ளிட்ட விமானப் பணிக்குழுவினரை ஐக்கிய அரபு இராச்சியம் கௌரவித்துள்ளது. இந்தியா செய்தி

பயணிகளின் உயிரைக் காப்பாற்றி இந்திய விமானிக்கு UAE இல் கௌரவ விருது

  • October 28, 2026
  • 0 Comments

சக விமானியின் தாக்குதலை எதிர்த்துப் போராடி, விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய flydubai விமானத்தின் தலைமை விமானி ஸ்மித் மச்சார் உள்ளிட்ட விமானப் பணிக்குழுவினரை ஐக்கிய அரபு இராச்சியம் கௌரவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், செவ்வாய்க்கிழமை (27) விமானப் பணிக்குழுவினருக்கு “ஆர்டர் ஒப் சயீத் II” (முதலாம் வகுப்பு) என்ற உயரிய சிவிலியன் விருதை வழங்கினார். இந்த விருதை துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு […]

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

ஏர்பஸ் வழக்கு: நாமலை நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு

  • October 28, 2026
  • 0 Comments

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்சஷ இன்று நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் […]

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய உலக நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். செய்தி

புலிகள்மீதான தடையை நீக்குமாறு கனடாவிடம் கோரிக்கை

  • October 28, 2026
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய உலக நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை […]

உலகம்

உலகமே பற்றி எரிந்துகொண்டிருக்க பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் பதிவு செய்த சீனா

  • October 28, 2026
  • 0 Comments

மின்னணுவியல் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறைகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியால், 2026-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனாவின் முக்கியத் தொழில் நிறுவனங்களின் லாபம் இரட்டை இலக்க சதவீதத்தில் அதிகரித்துள்ளது. சீனாவின் தேசியப் புள்ளியியல் பணியகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகள் இதை வெளிப்படுத்தியுள்ளன. அதன்படி, 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் முக்கியத் தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 15.5 சதவீதம் அதிகரித்து, அதன் மதிப்பு 6.03 […]

ஐரோப்பா

IS குழுவில் சேர்ந்தததாக குற்றச்சாட்டு – 07 பிரான்ஸ் பிரஜைகளுக்கு சிறை தண்டனை

  • October 28, 2026
  • 0 Comments

07 பிரான்ஸ் நாட்டினருக்கு ஈராக் நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. IS குழுவில் சேர்ந்ததற்காகவே அவர்கள்  நீதிமன்ற தண்டனையை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசு குழுவில் சேர்ந்தது மற்றும் அச்சத்தைப் பரப்பியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், ஈராக்கின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் இளமைப் பருவம் காரணமாக, அவர்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை வழங்க நீதிமன்றம் முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார். […]

இந்தியா – சீனா எல்லையில் மீண்டும் பதற்றம்: சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனப் படையினர் முகாம் இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

இந்தியா – சீனா எல்லையில் மீண்டும் பதற்றம்

  • October 28, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் கடந்த ஆண்டு பெரும்பகுதியில் எச்சரிக்கையுடன் மீளமைக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைய சில நாட்களில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் அந்த முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட பலவீனமானதாக இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல தசாப்தங்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பிரதேசம் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய முரண்பாட்டுக்குரிய விடயமாக இருந்து வருகிறது. 2020ஆம் ஆண்டு இரு நாடுகளின் படையினருக்கும் இடையில் […]

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக, அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், நேற்று பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார். இலங்கை செய்தி

பிரதமருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

  • October 28, 2026
  • 0 Comments

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக, அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், நேற்று பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார். கல்விப் பரிமாற்றங்கள், வர்த்தக வாய்ப்புகள், பேரிடர் தயார்நிலை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் தற்போதைய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக எக்ஸ் தளப் பதிவில், அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு புல்பிரைட் ஆணைக்குழுவை வலுப்படுத்துதல், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் […]

வெளிநாட்டு மாணவர்களின் கல்வி இலக்காக ஆஸ்திரேலியாவைத் தெரிவு செய்வதற்கான ஆர்வம், கடந்த ஆறு மாதங்களில் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வெளிநாட்டு மாணவர் தெரிவில் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு: பிரித்தானியா முன்னிலை

  • October 28, 2026
  • 0 Comments

வெளிநாட்டு மாணவர்களின் கல்வி இலக்காக ஆஸ்திரேலியாவைத் தெரிவு செய்வதற்கான ஆர்வம், கடந்த ஆறு மாதங்களில் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. குடியேற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நிலவும் தீவிர விவாதங்களுக்கு மத்தியில், வெளிநாட்டு மாணவர்கள் நாட்டுக்கு வருவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொழிற்கட்சி, கூட்டணி மற்றும் வன் நேஷன் கட்சி ஆகியவை முன்னெடுத்து வருகின்றன. இதன் பின்னணியிலேயே வெளிநாட்டு மாணவர்களின் ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் குடிவரவு அமைச்சர் டோனி புர்க் அறிவித்த நடவடிக்கைகளின்படி, வெளிநாடுகளிலிருந்து உயர்கல்வியைத் […]

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வை அவசியமானது என்றும், பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது இடைக்கால அறிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

செம்மணிப் புதைகுழி விடயத்தில் சர்வதேச நிபுணத்துவம் அவசியம்

  • October 28, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வை அவசியமானது என்றும், பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது இடைக்கால அறிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட செம்மணி தொடர்பான மூன்றாவது இடைக்கால அறிக்கையை நாங்கள் முழுமையாக ஆராய்ந்து, அதற்கான சட்ட […]

ஐரோப்பா செய்தி

சியூட்டா எல்லையில் இருந்து 12 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்

  • October 28, 2026
  • 0 Comments

ஸ்பெயின்  சியூட்டா எல்லை பகுதிக்கு வருகை தந்து தஞ்சம் கோரிய 12 பேரை  மொரோக்கோவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது. ஜூலை மாதம் நடந்த பாரிய எல்லை கடப்பிற்கு பிறகு நிகழ்ந்த முதல் நாடுகடத்தலாக இது காணப்படுகிறது. இது தொடர்பில் விளக்கமளித்துள்ள உள்துறை அமைச்சகம், அவர்களைப் பெற்றுக்கொள்ள மொராக்கோ ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அந்தக் குழுவினர் மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அவர்கள் தற்போது மொராக்கோவின் எல்லைக்குள் தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது. அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது தேசிய இனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஸ்பெயினின் […]