ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்து – 39 பேர் பலி
ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்று காலை 9.00 மணிக்கு சற்ற பின்பு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மாட்ரிட்டை தெற்கு அந்தலூசியா பிராந்தியத்துடன் இணைக்கும் ரயில் பாதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிறுவனமான அடிஃப் (Adif) தெரிவித்துள்ளது.
அத்துடன் அவசர மருத்துவ குழுக்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




