ஐரோப்பா முக்கிய செய்திகள்

அகதிகளுக்கான புதிய சட்ட வழிமுறைகளை அறிவித்தது பிரித்தானிய அரசாங்கம்

  • June 28, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் அகதிகளுக்கான புதிய, வரையறுக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான சட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் கீழ், பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அகதிகளுக்கு நிதியுதவி அளிக்க முடியும். உள்துறை அமைச்சகத்தின்படி, இந்த புதிய அமைப்பு கனடாவின் ஆதரவு மாதிரியைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரித்தானியாவிற்கு வர விரும்பும் அகதிகளின் விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் ஆதரவளிக்க முடியும். இந்தத் திட்டம் பிரித்தானியாவின் எதிர்கால அகதிகள் அமைப்பின் முக்கிய அங்கமாக […]

பொழுதுபோக்கு

72 குண்டுகள் முழங்க முழு அரச மரியாதையுடன் பாக்கியராஜின் உடல் தகனம்!

  • June 28, 2026
  • 0 Comments

மறைந்த நடிகர் மற்றும் இயக்குனர் பாக்கியராஜின் உடல் முழு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது பூதவுடன் இன்று 72 குண்டுகள் முழங்க சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்ட பாக்கியராஜ் அவர்கள் தனது 72 ஆவது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகம், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வரும் […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் – அராக்சி உறுதி

  • June 28, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தி அடுத்த 30 நாட்களுக்கு முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்திக்கு ஏற்படும் எந்தவொரு சவாலும் ‘பதட்டங்களை அதிகரிக்கும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார். அனைத்து தடைகளும் அகற்றப்பட்ட பிறகு, அந்த நீர்வழியின் முழு கொள்ளளவும் மீட்டெடுக்கப்படும். இதற்காகத்தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று அப்பாஸ் அராக்சி மேலும் கூறியுள்ளார். “இந்தப் பொறுப்பு ஈரான் இஸ்லாமியக் குடியரசையே சாரும். இந்த விஷயத்தில் வேறு எந்தக் கட்சிக்கோ […]

ஐரோப்பா

செர்பிய ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு

  • June 28, 2026
  • 0 Comments

செர்பியாவில் அரசாங்கத்திற்கு எதிராக 18 மாதங்களாக இடம்பெற்று வரும் போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதியான அலெக்சாண்டர் வுசிச் (Aleksandar Vucic) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 12 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வரும் அலெக்சாண்டரின் இந்த அறிவிப்பு புதிய தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது. அலெக்சாண்டர் வுசின் அறிவிப்பில், நான் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே ஜனாதிபதியாக இருப்பேன், அதன் பிறகு பதவி விலகுவேன்,” என்று அறிவித்துள்ளார். செர்பியாவில் 2024 ஆம் ஆண்டு ரயில் மேற்கூரை இடிந்து விழுந்து 16  பேர் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸில் வெப்ப அலை காரணமாக 1000 பேர் உயிரிழப்பு

  • June 28, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் பெரும் பகுதியை உலுக்கிய வெப்ப அலை காரணமாக சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள்  இன்று தெரிவித்துள்ளனர். ஜூன் 24 முதல், முந்தைய மாதங்களில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​சுமார் 1,000 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 85 சதவீதமானோர் 65  வயதிற்கும் மேற்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பாரிஸ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய இல்-டி-பிரான்ஸ் […]

உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலடுக்கம் பதிவு

  • June 28, 2026
  • 0 Comments

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று 6.1  ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA)  அறிவித்துள்ளது. மேற்படி நிலநடுக்கமானது  கடலுக்கு அடியில் 41 கிலோமீற்றர் ஆழத்தில்  மையம் கொண்டிருந்ததாக அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஹச்சினோஹே நகரம் மற்றும் புடாய் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளன.

இலங்கை

குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோருக்கு எதிராக சட்டமூலத்தில் திருத்தம்

  • June 28, 2026
  • 0 Comments

குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் குற்றவாளிக்கு விதிக்கப்படும் அபராதத்தை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் வேலைவாய்ப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு முன்மொழிவை தொழிலாளர் துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்புடைய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  பொது அல்லது தனியார் தொழில் நிறுவனத்தில் குழந்தையை வேலைக்கு அமர்த்தியதாக விசாரணைக்குப் பிறகு ஒருவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், அவர் ஒரு லட்சம் ரூபாய் […]

உலகம்

குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்

  • June 28, 2026
  • 0 Comments

குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள எட்டு அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளை  கூட்டு ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலின் மூலம் அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்க இராணுவத்தின் இரண்டாவது அலைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக  இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாஷிங்டன் மீறியதாகக் ஈரான் […]

ஐரோப்பா செய்தி

வெப்ப அலை – பிரித்தானியாவில் நீரில் மூழ்கி 05 பேர் பலி!

  • June 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சமீபத்திய வெப்ப அலையின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மூன்று பதின்ம வயதினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி நீர்நிலைகளில் நீராடும்போது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக  ஷ்ரூஸ்பரி பகுதியில் உள்ள செவர்ன் நதியில் இருந்து 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இவரைத் தவிர, 15 வயதுடைய சிறுவர், 69 வயது முதியவர் மற்றும் 50 வயது நிரம்பிய ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் […]

தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாட்டை அவர் முழுமையாக எதிர்க்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. உலகம் செய்தி

‘சுதந்திர பாலஸ்தீனம் மலராது’- இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

  • June 28, 2026
  • 0 Comments

சுதந்திர பாலஸ்தீனம் உருவாவதற்கான வாய்ப்புகளைத் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். வரும் தேர்தல்களில் தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மத்திய தரைக்கடல் முதல் ஜோர்டான் ஆறு வரையிலான இடைப்பட்ட பகுதியில் இரண்டு தனித்தனி நாடுகள் அமைய இடமில்லை என்று அவர் அறிவித்துள்ளார். தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாட்டை அவர் முழுமையாக எதிர்க்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது. இஸ்ரேல் மக்கள் இது விடயத்தில் […]