குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோருக்கு எதிராக சட்டமூலத்தில் திருத்தம்
குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் குற்றவாளிக்கு விதிக்கப்படும் அபராதத்தை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் வேலைவாய்ப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு முன்மொழிவை தொழிலாளர் துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொது அல்லது தனியார் தொழில் நிறுவனத்தில் குழந்தையை வேலைக்கு அமர்த்தியதாக விசாரணைக்குப் பிறகு ஒருவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், அவர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
இதற்கு முன்னர், தொடர்புடைய அபராதம் 10,000 ரூபாயாக காண்பட்ட நிலையில் தற்போது அதிகரிககப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட ஒருவரை வேலைக்கு அமர்த்தியதாக குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு, 12 மாதங்களுக்கு மிகாமல் இரண்டு வகையான சிறைத்தண்டனைகளில் ஒன்று மற்றும் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மிகாத அபராதம் விதிக்கப்படலாம்.
குற்றவாளிக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டும் விதிக்கப்பட வேண்டும் என்று தொடர்புடைய இந்த சட்டமூலம் குறிப்பிடுகிறது.




