இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

  • June 28, 2026
  • 0 Comments

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி,  தற்போதைய இறப்பு விகிதம் 0.06% ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 51,049 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ஜூன் மாதத்தில் மட்டும் 17,208 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது அந்த மாதத்தில் நோய்த்தொற்றுகள் கணிசமாக அதிகரித்திருப்பதைக் இந்த தரவுகள் காட்டுகின்றன. மேற்கு, தெற்கு, சபரகமுவ, மத்திய […]

ஜூலை 1 அன்று அட்லாண்டாவில் நடைபெறவுள்ள Round of 32 சுற்றில் அவர்கள் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளனர். செய்தி விளையாட்டு

காங்கோ அணி அசத்தல் ஆட்டம்: ஜுலை 1 இங்கிலாந்துடன் பலப்பரீட்சை

  • June 28, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை வரலாற்றில் காங்கோ DR Congo அணி பரபரப்பான மீள்வருகையை (Comeback) நிகழ்த்தி, முதல் முறையாக நாக்கவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. Yoane Wissa அடித்த 2 கோல்கள் மற்றும் Fiston Mayele அடித்த 1 கோல் ஆகியவற்றின் உதவியுடன், ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்ட உஸ்பெகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் காங்கோ வீழ்த்தியது. தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளைச் சந்தித்திருந்த போதிலும், உலகக் கோப்பைத் தொடரில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள உஸ்பெகிஸ்தான் […]

உலகம்

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிப்பு

  • June 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில்  கனமழையால்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களைச் சென்றடைய தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருவதாக மாகாண ஆளுனர் ஆண்டி பெஷியர் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளம் ஏற்கனவே உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், வாகனம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்த அவர், இறப்பு தொடர்பான சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை என்றார்.    

இரு அணிகளும் இணைந்து கோல் போஸ்ட்டை நோக்கி மொத்தம் 36 முறை அடித்த போதிலும், ஒரு பந்து கூட கோல் வலையைத் தொடவில்லை. இதனால் போட்டி சமனில் (0-0) முடிந்தது. செய்தி விளையாட்டு

36 தடவைகள் கைநழுவிய கோல் அடிக்கும் வாய்ப்பு

  • June 28, 2026
  • 0 Comments

மியாமி நகரில் நடைபெற்ற கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளும் இணைந்து கோல் போஸ்ட்டை நோக்கி மொத்தம் 36 முறை அடித்த போதிலும், ஒரு பந்து கூட கோல் வலையைத் தொடவில்லை. இதனால் போட்டி சமநிலையில்  (0-0) முடிந்தது. ஏற்கனவே உஸ்பெகிஸ்தான் மற்றும் காங்கோ DR அணிகளைத் தோற்கடித்திருந்த கொலம்பியா, இந்தப் புள்ளியின் மூலம் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் போர்ச்சுகல் அணி இரண்டாமிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு […]

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. எனவே, புதிய சக்தி நாட்டில் தோற்றம்பெறாது. இந்த சக்தி தொடரும் என நம்புகின்றேன் அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சி தொடரும்: வாசுதேவ ஆதரவுக்குரல்

  • June 28, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சட்டம் சிறப்பான முறையில் அமுலாகிவருகின்றது” – என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ நாட்டில் சட்டம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கம் பின்னடிக்கவில்லை. சுரேஷ் சலே விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளனர். அவர் உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபடுவது தவறு. ஏனெனில் உடல் பலவீனமடைந்தால் வழக்கு விசாரணையை முன்னோக்கி கொண்டுசெல்ல […]

கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், கடலோரப் பகுதியான லா குவைராவை (La Guaira) முற்றிலுமாகச் சிதைத்துள்ளன. உலகம் செய்தி

வெனிசுலாவில் 1,430 பேர் பலி: 51,000 பேர் மாயம்

  • June 28, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி மூன்று நாட்களாகியுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கின்றது. இந்தத் துயர சம்பவத்தில் இதுவரை 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 51,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், கடலோரப் பகுதியான லா குவைராவை (La Guaira) முற்றிலுமாகச் சிதைத்துள்ளன. கடுமையான போக்குவரத்து நெரிசல் மீட்புப் பணிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியதை […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘ஈரான் என்ற நாடே இருக்காது’ – எச்சரிக்கை முழக்கத்துடன் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

  • June 28, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டு சில நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. நான்கு மாத கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பிற்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை, மற்ற தரப்பு மீறிவிட்டதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தனது சமூக ஊடகப் பக்கத்தில், “நாம் நியாயமாக நடந்துகொள்ள முடியாத ஒரு கட்டம் வரலாம். […]

உலகம்

ட்ரோனுடன் மோத இருந்த விமானம் – மயிரிழையில் தப்பிய பயணிகள்

  • June 27, 2026
  • 0 Comments

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ட்ரோன் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. போயிங்  737 என்ற விமானம் நியூவர்க் லிபர்ட்டி (Newark Liberty) சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது   ட்ரோன் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. விமானம் தரையிறங்கும்போது சுமார் 106 பயணிகள் மற்றும் 05 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் விபரித்த விமானி, தங்கள் விமானத்திற்குக் கீழே சுமார் 100 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த, ஏறத்தாழ […]

உலகம்

ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : இந்தியாவிலும் உணரப்பட்டது

  • June 27, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிர தன்மை காரணமாக வட இந்தியாவின் பல பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இரவு 7.04 மணிக்கு ஏற்பட்டது என்றும், இது பூமிக்கு அடியில் 215 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இதற்கிடையே நேற்றில் இருந்து பாகிஸ்தானின் தென்மேற்கு […]

உலகம்

அலாஸ்காவில் கப்பல் மோதியதால் நேர்ந்த துயரம் – அழிந்து வரும் கர்ப்பிணி திமிங்கலம் உயிரிழப்பு

  • June 27, 2026
  • 0 Comments

அலாஸ்காவில் ரோயல் கரீபியன் நிறுவனத்தின் கப்பல் ஒன்று, கர்ப்பிணியான பெண் திமிங்கலத்தின் மீது மோதியதில் அந்த உயிரினம் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விலங்கு நல ஆர்வலர்கள் கப்பல்களின் வேகத்தை குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். குறித்த பெண் திமிங்கலம் அழிந்து வரும் ஃபின் திமிங்கல ( fin whale) வகையைச் சேர்ந்ததாகும். கூட்டாட்சி அதிகாரிகள் நடத்திய பிரேதப் பரிசோதனையில், கப்பல் மோதியதால் ஏற்பட்ட பலத்த காயங்களால் திமிங்கலம் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி குறித்த திமிங்கலம் நல்ல ஆரோக்கியத்துடன் […]