இலங்கை செய்தி

நீதிகோரி செம்மணியில் உரிமைப்பந்தம் போராட்டம்

  • June 29, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மாலை செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், அங்குள்ள அணையா விளக்கு தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரையில் 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் […]

ஜூன் 17 அன்று எட்டப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்த நீரிணை மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தாக்குதலை நிறுத்த ஈரான், அமெரிக்கா இணக்கம்

  • June 29, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை தொடர்பாக நிலவி வரும் மோதல்களை தற்காலிகமாக நிறுத்தவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் நடத்திய தாக்குதல்களால் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராது என அஞ்சப்பட்ட நிலையில், இந்த முடிவு அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. “இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) அனைத்து அம்சங்கள் குறித்தும் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ளன. தற்போதைக்கு இரு நாடுகளும் தங்களது […]

உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 05 நாட்கள் மீட்பு பணியில் 33 பேர் மீட்பு

  • June 28, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்ட   இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 05 ஆவது நாளாக தொடர்கிறது. தற்போதுவரை இடிபாடுகளில் சிக்கியிருந்த 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல்லாயிரக்கணக்கானோர்  மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களில் பெரும்பாலான குழந்தைகளும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த நிலநடுக்கங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400 ஐக் கடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலமான கடலோர லா குவைராவில் வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.    

ஐரோப்பா

போர்ச்சுகலில் நிலநடுக்கம்

  • June 28, 2026
  • 0 Comments

போர்ச்சுகலின் சுற்றுலாப் பகுதியான அல்கார்வில் (Algarve) இன்று மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 4.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் கடல் மற்றும் வளிமண்டல நிறுவனம் (IPMA) தெரிவித்துள்ளது. இதன் அதிர்வு லாகோஸ் (Lagos) மற்றும் போர்டிமாவோ (Portimao) நகரங்களிலும் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, கேப் செயின்ட் வின்சென்ட்டிலிருந்து (Cape St. Vincent,) சுமார் 70 கி.மீ தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட […]

இலங்கை

கடமை துப்பாக்கி மாயம் – போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்

  • June 28, 2026
  • 0 Comments

யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எடுத்துச் சென்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மாயமான விவகாரம் தொடர்பிலேயே  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமைக்காகச் செல்லும்போது கைத்துப்பாக்கியொன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளதுடன், அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில்  குறித்த அதிகாரி  நேற்று (27) சீதாவக்கபுர  குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.  அவர்  இன்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் […]

உலகம்

சவூதி எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து – 14 பேர் பலி

  • June 28, 2026
  • 0 Comments

சவூதி எண்ணெய் நிறுவனமான அராம்கோவிற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, ராஸ் தனுராவில் (Ras Tanura) விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்படடுள்ளது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியை, அராம்கோ நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸில் விமான விபத்து – 11 பேர் உயிரிழப்பு

  • June 28, 2026
  • 0 Comments

பிரான்சின் டோம்ப்லைன் (Tomblaine) நகரில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று காலை 11 மணியளவில் நான்சி நகருக்கு அருகே இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் விமானி உள்பட 10 ஸ்கைடைவர்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் விபத்து குறித்த சாட்சியங்களை சேகரித்து வருகின்றனர். அத்துடன் விபத்து நடந்த பகுதியூடான போக்குவரத்தை தவிர்க்குமாறும் […]

உலகம்

லெபனான் ஒப்பந்தம் ஒரு வரலாற்று வெற்றி – நெதன்யாகு மகிழ்ச்சி

  • June 28, 2026
  • 0 Comments

லெபனானுடன் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு வரவேற்றுள்ளார். இந்த ஒப்பந்தத்தை ஒரு வரலாற்றுச் சாதனை என்று வர்ணித்த நெதன்யாகு, இது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவிற்கு ஒரு பெரும் பின்னடைவு என்றும் கூறினார். அந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலின் பாதுகாப்பிற்குத் தேவைப்படும் வரை லெபனானுக்குள் ஒரு பாதுகாப்பு மண்டலத்தைப் பராமரித்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உள்ள உரிமையை அமெரிக்காவும் லெபனானும் அங்கீகரித்துள்ளன என்று அவர் கூறினார். ஹிஸ்புல்லா மற்றும் பிற அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் நிராயுதபாணியாக்கப்படும் வரையிலும், லெபனானிலிருந்து […]

உலகம்

ஈரான் மீது அமெரிக்கா மீளவும் தாக்குதல்

  • June 28, 2026
  • 0 Comments

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் பனாமா கொடி ஏற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள பல இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஈரானின் இராணுவக் கண்காணிப்பு அமைப்புகள், தகவல் தொடர்பு மையங்கள், வான் பாதுகாப்புத் தளங்கள், ஆளில்லா விமானச் சேமிப்புத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்கும் திறன்கள் தொடர்பான இலக்குகளைத் தாக்கியதாக […]

இந்தியா

இந்தியாவில் ஒன்றரை மாதங்களில் 23 மசூதிகள், மதரஸாக்கள், வழிபாட்டுத் தலங்கள் இடிப்பு

  • June 28, 2026
  • 0 Comments

இந்தியாவில் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஒன்றரை மாதத்தில் 23 மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் இடிக்கப்பட்டுள்ளன. கடந்த 45 நாட்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 1,000 ஆண்டுகள் பழமையான மசூதி உட்பட 23 மசூதிகள், மதரஸாக்கள், தர்காக்கள் மற்றும் ஈத்காக்கள் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அறிக்கைகளின்படி, டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் சாலைகளை விரிவுபடுத்துதல் என்ற பெயரில் இந்த நடவடிக்கைகள் […]