பிரான்ஸில் வெப்ப அலை காரணமாக 1000 பேர் உயிரிழப்பு
ஐரோப்பாவின் பெரும் பகுதியை உலுக்கிய வெப்ப அலை காரணமாக சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
ஜூன் 24 முதல், முந்தைய மாதங்களில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளுடன் ஒப்பிடும்போது, சுமார் 1,000 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 85 சதவீதமானோர் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பாரிஸ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய இல்-டி-பிரான்ஸ் பிராந்தியத்தில், மக்கள் தங்கள் வீடுகளில் இறப்பது மிகக் கடுமையான அதிகரிப்புக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




