உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் – அராக்சி உறுதி

ஹோர்முஸ் ஜலசந்தி அடுத்த 30 நாட்களுக்கு முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்திக்கு ஏற்படும் எந்தவொரு சவாலும் ‘பதட்டங்களை அதிகரிக்கும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அனைத்து தடைகளும் அகற்றப்பட்ட பிறகு, அந்த நீர்வழியின் முழு கொள்ளளவும் மீட்டெடுக்கப்படும். இதற்காகத்தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று அப்பாஸ் அராக்சி மேலும் கூறியுள்ளார்.

“இந்தப் பொறுப்பு ஈரான் இஸ்லாமியக் குடியரசையே சாரும். இந்த விஷயத்தில் வேறு எந்தக் கட்சிக்கோ அல்லது நாட்டிற்கோ பங்கு கிடையாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தங்களுக்கு மத்தியல் மத்திய கிழக்கு பகுதியில் மோதல் நீடித்து வருகின்றது. இந்நிலையில் அப்பாஸ் அராக்சியின் கருத்து மேலும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்