வெப்ப அலை – பிரித்தானியாவில் நீரில் மூழ்கி 05 பேர் பலி!
பிரித்தானியாவில் சமீபத்திய வெப்ப அலையின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் மூன்று பதின்ம வயதினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி நீர்நிலைகளில் நீராடும்போது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ஷ்ரூஸ்பரி பகுதியில் உள்ள செவர்ன் நதியில் இருந்து 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
இவரைத் தவிர, 15 வயதுடைய சிறுவர், 69 வயது முதியவர் மற்றும் 50 வயது நிரம்பிய ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையின் தீவிரத்தால் பொதுமக்கள் பலரும் எச்சரிக்கையின்றி ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகளில் இறங்குவதே இந்த அடுத்தடுத்த சோக நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாத நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்குமாறு அவசரக் கால மீட்புக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.




