உலகம்

குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்

குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள எட்டு அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளை  கூட்டு ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலின் மூலம் அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்க இராணுவத்தின் இரண்டாவது அலைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக  இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாஷிங்டன் மீறியதாகக் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள ஏற்பாடுகள், ஹோர்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஈரானுக்கு வழங்குகின்றன என்றும், ஒப்பந்தத்தை மீறும் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஆர்.ஜி.சி மேலும் கூறியது.

“புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஹோர்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த இஸ்லாமியக் குடியரசுடன் இஸ்லாமாபாத் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இனிமேல், விதிகளை மீறும் கப்பல்கள் கடந்த காலத்தை விட அதிக வலுவுடன் கையாளப்படும் எனவுசும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்