உலகம்

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு

  • July 5, 2026
  • 0 Comments

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில்  மறைந்த தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு இன்று  இடம்பெற்று வருகிறது. இதில்  லட்சக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன்போது கூட்டத்தின் முன்பு பேசிய கலைஞர் ஒருவர் ட்ரம்பின் மரணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கவிஞரான முகமது ரசூலி, “அமெரிக்காவுக்கு மரணம்!” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்!” என்ற கோஷங்களை எழுப்பினார். ட்ரம்பைக் குறிப்பிட்டு பேசிய அவர், “உலகிலேயே மிகவும் கேவலமான மனிதன் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறான்?” என்று கேள்வி எழுப்பினார். […]

உலகம்

குடியுரிமை மறுசீரமைப்பு : காங்கிரஸிடம் உதவி கோரும் ட்ரம்ப்

  • June 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிக விசாவிலோ வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்கக் குடிமக்கள் அல்ல என்று ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்திருந்த உத்தரவு எதிராக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தை மீள நடைமுறைப்படுத்த காங்கிரஸின் பங்களிப்பை அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தனது ட்ருத் சோசியல் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், “நீண்ட மற்றும் சிக்கலான அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் தேவையில்லை. நமது நாட்டிற்குச் செலவுமிக்கதும் நியாயமற்றதுமான பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர காங்கிரஸ் […]

உலகம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – விரிவடையும் ட்ரம்பின் அதிகாரங்கள்

  • June 29, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திரமான கூட்டாட்சி அமைப்புகளின் தலைவர்களை ஜனாதிபதி பணிநீக்கம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவருடைய அதிகாரங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பானது 91 ஆண்டுகால பழைமையான சட்ட விதியை மாற்றியமைத்துள்ளது. அதேநேரம் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் மற்றும் நுகர்வோர் நிதிப் பாதுகாப்புப் பணியகம் உள்ளிட்ட மேலும் பன்னிரண்டு சுதந்திரமான அமைப்புகளுக்கு  குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.  

உலகம்

பல நாடுகள் மீது 100% சுங்கவரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்

  • June 27, 2026
  • 0 Comments

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவைகள் வரியை விதிக்கும் எந்தவொரு நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது, அமெரிக்க நிறுவனங்கள் மீதான பாரபட்சமான வரிவிதிப்பு என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இட்டுள்ள பதிவில், அத்தகைய வரியை விதிக்கும் எந்தவொரு நாடும் கடுமையான வர்த்தகத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளதோடு, அந்த நாடுகள் […]

ஐரோப்பா

ட்ரம்புக்கு என் மீது ஈர்ப்பு இருக்கலாம் – லண்டன் மேயர்

  • June 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன் மீது ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்று தனக்குப் புரியவில்லை என லண்டன் மேயர் சாதிக் கான் கூறியுள்ளார். ஒருவேளை அமெரிக்க ஜனாதிபதிக்கு என் மீது ஒரு ஈர்ப்பு இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி டிரம்பின் மனதில் எனக்கு ஏன் இவ்வளவு இடம் இருக்கிறது என்று புரியவில்லை” என்று கூறினார். ஒருவேளை அமெரிக்க ஜனாதிபதிக்கு என் மீது ஒரு ஈர்ப்பு […]

உலகம்

நிரந்தர அமைதி ஒப்பந்தம் – ஈரானுக்கு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

  • June 20, 2026
  • 0 Comments

நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள 60 நாட்கள் அவகாசம் உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதற்கு இணங்கத் தவறினால், “அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்காத” நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஈரானுடனான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை பெஞ்சமின் நெதன்யாகு சீர்குலைக்க முயற்சிக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.    

உலகம்

நெதன்யாகு உடனான உறவில் விரிசல்? பகிரங்கமாக எச்சரித்த ட்ரம்ப்

  • June 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இராணுவ நடவடிக்கைகளைக் கடுமையாகக் கேள்விக்குட்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதல் மிகவும் வன்முறையானது மற்றும் தேவையற்றது என்று கூறியுள்ளார். ஹிஸ்புல்லாவைக் கையாள்வதற்கு சிரிய அதிபரே மிகவும் பொருத்தமான மற்றும் “திறமையான” நபர் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி, லெபனான் விவகாரத்தில் நெதன்யாகு “மேலும் பொறுப்புடன்” செயல்பட வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா பிரச்சினையை […]

உலகம்

“அதிக பகுத்தறிவுள்ளவர்” : மொஜ்தபா கமெனியை பாராட்டிய ட்ரம்ப்!

  • June 7, 2026
  • 0 Comments

ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei), தனது முன்னோடியை விட “அதிக பகுத்தறிவுள்ளவர்” என்று தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், கமெனி “மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ளார்” என்றும் அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், இளவயதினராக இருப்பதால், அதிக பகுத்தறிவுள்ளவர் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ளார். எனவே, அவரிடம் ஒருவித துணிச்சல் இருக்கிறது,” […]

உலகம்

ஈரானின் இராணுவத்தை அழித்ததாக ட்ரம்ப் பெருமிதம்!

  • June 6, 2026
  • 0 Comments

ஈரானின் இராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஈரான் தனது அசல் ஏவுகணை ஆயுதக் கிடங்கில் “சுமார் 21 அல்லது 22 சதவிகிதத்தை” மட்டுமே தற்போதை வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கிடையே தனது வளைகுடா நட்பு நாடுகளை இலக்காகக் கொண்ட ஆறு ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும், மற்றொரு ஏவுகணை அதன் இலக்கை அடையத் தவறியதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலகம்

“பெய்ரூட்டை தாக்குவோம்” : ட்ரம்ப் – நெதன்யாகு இடையான இரகசிய உரையாடல் கசிவு!!

  • June 5, 2026
  • 0 Comments

பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டொனால்ட்  ட்ரம்ப் ஆகியோருக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் ஒன்று கசிந்துள்ளது. அந்த உரையாடலில் பெய்ரூட் மீதான வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவோம் என்று நெதன்யாகு கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப்   முற்றிலும் பைத்தியக்காரத்தனம் என விமர்சித்துள்ளார். அத்துடன் நடந்து கொண்டிருக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளை இத்தகைய நடவடிக்கைகள் சீர்குலைக்கும் என்ற ஈரானிய எச்சரிக்கைகளைச் சுட்டிக்காட்டி, பெய்ரூட்டைத் தாக்குவதை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதலளித்த நெதன்யாகு வடக்கு இஸ்ரேல் […]