பின்லாந்தில் ரஷ்ய சரக்கு கப்பல் மீதான தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்பு
பின்லாந்திற்கு அருகில் உள்ள பால்டிக் கடற்பகுதியில் ரஷ்யாவின் சரக்கு கப்பல் தாக்கப்பட்டமைக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது.
அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்தோம். ரஷ்யக் கொடியுடன் வரும் ஒவ்வொரு கப்பலும், ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் அனைத்தும் ரஷ்யாவின் பிராந்திய அல்லது நடுநிலைக் கடல் எல்லைக்குள் எங்களுக்கு ஒரு சட்டபூர்வமான இலக்காகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெலன்ஸ்கியின் கருத்தை தொடர்ந்து கீவ்வின் வலுவான ஆதரவாளரான நோர்வே இதுபோன்ற செயற்பாடுகளில் மிகவும் கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக, பின்லாந்து, எஸ்டோனியா மற்றும் ரஷ்யக் கப்பல்கள் ஒரு கூட்டு மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




