ஐரோப்பா

ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர ஐஸ்லாந்து பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராவதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதால் ஐஸ்லாந்துக்கு “இழப்பதற்கு எதுவும் இல்லை” என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் ( Jean-Noel Barrot) நேற்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேருவது குறித்து   அந்நாடு பொதுவாக்கெடுப்பு நடத்த தயாராகி வருகின்ற நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வாக்கெடுப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பிறகு, ஐஸ்லாந்து மக்கள்   வாக்களிக்க உள்ளனர்.

டென்மார்க்கிடமிருந்து பரந்த ஆர்க்டிக் பிரதேசத்தின் கட்டுப்பாட்டைப் பெற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இந்தப் பொது வாக்கெடுப்பு நடைபெறுவதால் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக கருதப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்தப் பிரதேசத்தின் கட்டுப்பாட்டைப் பெற முயன்றபோது, ​​கிரீன்லாந்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்த ஆதரவு, அந்த கூட்டமைப்பில் இணைவதன் மதிப்பை ஐஸ்லாந்துக்குக் காட்டியுள்ளது என்று ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சர் தோர்கெர்டுர் கட்ரின் குன்னார்ஸ்டோட்டிர் ( Thorgerdur Katrin Gunnarsdottir ) கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்