இலங்கை செய்தி

கிளிநொச்சியில் மீண்டும் எழுந்தது மாவீரர் நினைவு வளைவு

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாள்களுக்கு முன்னர் அகற்றப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, இளைஞர்களின் முயற்சியால் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டு இன்று புதன்கிழமை அதிகாலை அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாள்களுக்கு முன்னர் அகற்றப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, இளைஞர்களின் முயற்சியால் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டு இன்று புதன்கிழமை அதிகாலை அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாள்களுக்கு முன்னர் அகற்றப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, எமது இளைஞர்களின் முழுமையான முயற்சியால் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டு இன்று அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மாவீரர்களின் நினைவுகளை எவராலும் அழித்துவிட முடியாது என்பதை எம்மவர்கள் தமது செயற்பாட்டின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

இது வெறும் நினைவு வளைவு அல்ல; எம் மண்ணுக்காக உயிர் துறந்த மாவீரர்களின் நினைவுகளையும், அவர்களின் தியாகத்தையும் சுமந்து நிற்கும் வரலாற்றுப் பதிவு.” – என்று சிறீதரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை